7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபரா? இனி ஜாக்கிரதையா இருங்க.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!

By Kalai Selvi  |  First Published Nov 14, 2023, 10:52 AM IST

நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால் இதனால் பல வித உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.


நல்ல ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் தேவை. மூளையையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், அனைத்து உறுப்புகளுக்கும் ஓய்வு அளிக்கவும் தினமும் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இன்றைய பரபரப்பான மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால், பலருக்கு இரவில் ஏழு மணி நேரம் தூக்கம் வருவதில்லை மற்றும் கிடைப்பதும் இல்லை. இது பலவித  உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

போதுமான தூக்கம் உடலுக்கு அவசியம். இதனால் மூளையும் மனமும் அமைதியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. போதுமான தூக்கம் இல்லாததால் சில கோளாறுகள் ஏற்படலாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் தினமும் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும். இந்த தூக்கம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. போதுமான தூக்கம் இல்லாததால் பலவித உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில் இப்பதிவில் நாம் போதுமான தூக்கமின்மையால் ஏற்படும் சில உடல் நல பிரச்சனைகளை குறித்து இங்கே பார்க்கலாம்.

Latest Videos

undefined

மனசோர்வு: இரவில் நன்றாக தூங்குபவர்களை விட, நன்றாக தூங்காத அவர்களுக்கு மனசாரமும் ஏற்படும். அபாயம் நீங்கள் தூங்காத போது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. மற்றும் அது உங்கள் மனசோர்வின் அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சுவாச பிரச்சனை: சரியாக தூங்காத போது சளி காய்ச்சல் போன்ற சுவாச பிரச்சனைகள் மற்றும் கடுமையான நிலையில் சுவாச நோய்களும் ஏற்படும். இருப்பினும் மிக ஏற்கனவே சுவாச நோய்களில் பாதிக்கப்பட்டிருந்தால் குறைவாக தூங்குவது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

இதையும் படிங்க:  எச்சரிக்கை: தூங்கும் போது மொபைல் போன் பக்கத்துல வைக்காதீங்க.. பெரிய ஆபத்தை விளைவிக்கும்!

இதய நோய்கள்: போதுமான மணி நேரம் தூங்காமல் இருப்பது இருதய நோய்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல் தண்ணி தானே சரி செய்து கொள்கிறது. இருப்பினும் நீங்கள் நன்றாக தூங்காத போது உங்கள் உடலில் ரத்த நாளங்களை சரி செய்ய முடியாது. இது இறுதியில் இதய நோய்க்கு வழி வகுக்கும்.

நாளமில்லா அமைப்பு: நீங்கள் போதுமான மணி நேரம் தூங்காத போது அது உங்கள் ஹார்மோன்களை பாதிக்கலாம் மற்றும் அது உங்கள் உடலை பாதிக்கலாம். நாளமில்லா அமைப்பு ஹார்மோன்களை வெளியிடாத போது செல் பழுது பியூட்டரி சுரப்பி மற்றும் பல செயல்பாடுகள் போன்ற பல செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எடையை பாதிக்கும்: தூக்கமும் எடையும் நெருங்கிய தொடர்புடையவை. போதிய தூக்கமின்மையால், உடலில் உள்ள கிரெலின் மற்றும் லெப்டின் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் சமநிலை சீர்குலைகிறது. கிரெலின் என்ற ஹார்மோன் பசியைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் லெப்டின் என்ற ஹார்மோன் மனநிறைவைக் குறிக்கிறது. போதுமான தூக்கமின்மை கிரெலின் ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. அது பசியை உண்டாக்குகிறது. அத்தகைய நேரங்களில், அதிக கலோரி மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிட ஆசை இருக்கும். மறுபுறம், லெப்டின் ஹார்மோனின் அளவு குறைகிறது. அதனால் சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு நிறைவாக இருக்காது. இந்த ஏற்றத்தாழ்வு மாலையில் அதிகமாக உணரப்படுகிறது. இதனால் எடை கூடுகிறது.

click me!