
1.. உடற்பயிற்சி
மாலை வேளையில் அலுவலகம் முடித்துவிட்டு, ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, இரவில் தூங்கும் போது அதிகமான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
2.. குளியல்
இரவில் தூங்கும் முன் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் இருந்து 400 கலோரிகள் எரிக்கப்படுவதாக பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.. க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள ப்ளேவோனாய்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீ குடித்தால், ஒரே நாளில் 3.5 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் இரவில் தூங்கும் முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்தால், இன்னும் நல்லது.