தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...

Asianet News Tamil  
Published : Apr 11, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...

சுருக்கம்

If you eat onions that are soaked in honey you will get such benefits ..

வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும். 

பண்டைய காலம் முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்து வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

சிறந்த மருத்துவ குணம் கொண்ட இந்த இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை எப்படி செய்வது, இதன் மூலம் பெறும் நன்மைகள் என்னென்ன? பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்

வெங்காயம் 

தேன் 

செய்முறை!

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். 

ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். 

ஒரு பவுல் / கப்-ல் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

மறுநாள் பவுலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்!

* காய்ச்சலை போக்கும்.

* தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.

* சளி தொல்லை நீங்கும்.

* கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

* நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்.

* இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும்.

* செரிமானத்தை ஊக்கவிக்கும். * இது ஒரு சிறந்த கிருமிநாசினி.

* உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

* ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.

* இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

* சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake