முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப்  பற்களை போக்கலாம். எப்படி?

Asianet News Tamil  
Published : Apr 11, 2018, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப்  பற்களை போக்கலாம். எப்படி?

சுருக்கம்

You can get the property of the property with the egg hole. How?

வாய் சுகாதாரத்தால் கிருமிகள் பற்களைத் தான் சொத்தையாக்குகின்றன. வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே முடிந்த அளவு சொத்தைப் பற்கள் வராமல் பார்த்துக் கொள்வதே நல்லது.

சொத்தைப் பற்கள் இருந்தால், அதைப் போக்க பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ஓடு. 

முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்க முடியும். ஏனெனில் இதில் ஏராளமான அளவில் கால்சியம் மற்றும் 27 கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அங்கேரிய மருத்துவர், முட்டை ஓட்டின் ஆரோக்கியமான பண்புகள் குறித்து உயிரியலாளர் மற்றும் மருத்துவர்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தினார். பத்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், முட்டை ஓட்டில் எளிதில் உடல் உறிஞ்சும்படியான கால்சியம் ஏராளமான அளசில் இருப்பது கண்டறியப்பட்டது.

பிலிப்பைன்ஸில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், மூட்டை ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பற்காறைகள் உருவாகும் வாய்ப்பைக் குறைப்பதாகவும், வலிமையான எனாமலைக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

முட்டை ஓட்டில் உள்ள கால்சியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள், ஆரோக்கியமான எனாமலுக்கு தேவையானவை என்றும், சொத்தைப் பற்களைத் தடுக்கும் எனவும் ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது.

முட்டை ஓட்டில் மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அலுமினியம், பாஸ்பரஸ், சல்பர், சிலிகான், சோடியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எப்படி செய்வது?

முட்டை ஓடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முட்டை ஓடுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, முட்டை ஓடுகளை உலர்த்தி, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

தினமும் இந்த முட்டை ஓடு பொடியை 1/2 டீஸ்பூன் உண்ணும் உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். எலும்பு திசுக்கள் கால்சியத்தால் ஆனது. ஆகவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள், முட்டை ஓட்டின் பொடியை உணவில் சேர்த்து வந்தால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான கோளாறுகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கால்சியம் குறைபாடு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake