
இந்த நான்கு பழங்களையும் சாப்பிடுவதால் ஆரோக்கியம் பல மடங்கு பெருகும்.
ஆப்பிள்
ஆப்பிள் உங்கள் உடல் எடையை குறைக்கும். அதோடு சர்க்கரை வியாதி வராது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதிலுள்ள ஃப்ளேவினாய்டு பாலிமர் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது. குளுகோஸை கொழுப்பாக மாற்றும் என்சைமின் செயலை தடுப்பதால் குளுகோஸ் சக்தியாக எரிக்கப்படுகிறது.
பேரிக்காய்
பேரிக்காயில் இருக்கும் பெக்டின் மற்றும் ஃப்ளேவினாய்டு சர்க்கரை வியாதியை தடுக்கிறது. உடல் பருமனையும் இளைக்கச் செய்கிறது. தினமும் பேரிக்காயை சாப்பிடுவதால் உங்கள் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகவும் ஜீரண சக்தி அதிகரிக்கவும் செய்கிறது. வயதானால் உண்டாகும் ஜீரண பாதிப்பை வர விடாமல் தடுக்கும்.
ப்ளூ பெர்ரி
நீல நிறத்தில் இருக்கும் ப்ளூ பெர்ரி மிகவும் நல்லது. அதன் நீல நிறத்திற்கு காரணமான ஆந்தோ சயனைன் என்ற வேதிப் பொருள் புற்று நோய், இதய நோய் வரவிடாமல் தடுக்கும். தினமும் அரை கப் அளவு ப்ளூ பெர்ரி சாப்பிட்டால் 100 மி.கி அளவுள்ள ஆந்தோசயனின் கிடைக்கும்.
ஸ்ட்ரா பெர்ரி
அதிக கார்போஹைட்ரேட் உணவு சாப்பிட்டிருந்தால் அதனால் அதிகரிக்கும் சர்க்கரை அளவை ஸ்ட்ரா பெர்ரி குறைக்கும். இதிலுள்ள ஆந்தோசயனைன் மற்றும் ஃப்ளேவினாய்டு உடல் கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. இதய நோய், கல்லீரல் சம்பந்தப் பட்ட நோய் வரவிடாமல் தடுக்கும். அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
மேலும், இந்த 4 பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும். இதய நோய் வராது. இரைப்பை வளமுடன் இருக்கும். சர்க்கரை வியாதி தடுக்கப்படும். புற்று நோய் வராது. நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்காகும்.