உடலுக்கு 7 மணிநேரம் தூக்கம் அவசியம்- ஏன் தெரியுமா?

By Dinesh TGFirst Published Oct 16, 2022, 11:34 PM IST
Highlights

சராசரியாக ஒருவர் 7 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தூங்குவது நல்ல தூக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லோருக்குமே நிம்மதியான தூக்கம் கிடைக்கிறதா என்பதை நாம் உறுதியாக கூற முடியாது.

உடலை நல்ல இயக்கத்துடன் வைத்திருப்பதும், உரிய உணவுகளை சாப்பிடுவதும் நம்முடைய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். அதே அளவுக்கு நல்ல ஓய்வுகும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை சேர்க்கிறது. குறிப்பாக ஓய்வு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சராசரியாக ஒருவர் 7 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தூங்குவது நல்ல தூக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லோருக்குமே நிம்மதியான தூக்கம் கிடைக்கிறதா என்பதை நாம் உறுதியாக கூற முடியாது. தூக்கம் தடைபடும் போது தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மூச்சுத்திணறலும் வருவதுண்டு. அது ஸ்லீப் அப்னியா என்று குறிப்பிடப்படுகிறது. முறையான உறக்கம் கிடைக்காமல் போனால் என்னனென்ன நடக்கும் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.

மனநலன் பாதிப்பு

ஒரு பிரச்னை அல்லது சிந்தனை, இதனால் தூக்கம் வரலவில்லை என்றால் அது வேறு விஷயம். அந்த பிரச்னை தீர்ந்தவுடன் நாம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடுவோம். ஆனால் முறையான தூக்கமில்லாமல் மனம் வருத்தத்துடன் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். உரியமுறையில் தூங்கவில்லை என்றால், அலைபாயும் அவருடைய மனதை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகவும் கடினமாகும். இதனால் அவருக்கு மன அழுத்தம் அதிகரித்து, மனநலன் பாதிக்கப்பட வழிவகுக்கும்.

மூச்சு விடுவதில் பிரச்னை

சரியான தூக்கம் இல்லாமல் தவித்தால், காது, மூக்கு மற்றும் தொண்டை சார்ந்த பிரச்னைகள் உருவாகும். இதனால் அவர்களுடைய மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இதன்காரணமாக உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். ஒருவேளை ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகளால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால், மேலும் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும்.

சக்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!

இருதய ஆரோக்கியத்தில் பாதிப்பு

நீண்ட நாட்களாக உரிய முறையில் உறங்காமல் இருப்பவர்களுக்கு இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதை அறிந்துகொண்டு தினசரி நன்றாக தூங்கி வந்தால், அந்த பிரச்னை சரியாகிவிடும். ஆனால் பாதிப்பை உணராமல் மேலும் உறக்கத்தை கெடுத்துவந்தால், இருதய ஆரோக்கியம் பாழாகும். ரத்தக்குழாய்கள் சரியாக இயங்காமல் மாரடைப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர பல்வேறு இருதயம் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்க வழிவகுக்கும்.

காலையில் எழுந்தவுடன் இந்த டீயை குடிச்சுப் பாருங்க- உடலுக்கு புத்துணர்ச்சி கூடும்..!!

ஹார்மோன் பயன்பாடு பாதிக்கப்படும்

நமது உடலமைப்புக்கு சுரபிகள் வேலை செய்வது முக்கியம். நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சுரபிகள் பல தூங்கும் நேரத்தில் தான் பணி செய்கிறது. நீங்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு போகாமலும், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதாலும் அவற்றால் சரிவர இயங்க முடியாது.இது பல்வேறு உடல்நலப் பிரச்னைக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக ஒருசில சுரபிகளில் ஏற்படும் கோளாறுக்கு மருந்தே கிடையாது. முக்கிய மூளைக்கு அருகில் இருக்கும் பிட்யூட்டரி சுரபியின் பயன்பாடு மாறினால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமே மாறிப்போகும். 

click me!