சக்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!

By Dinesh TG  |  First Published Oct 16, 2022, 11:28 PM IST

எலும்பு பலவீனமடைவதால் ஏற்படும் பிரச்னை தான் ஆஸ்டியோபோரோசிஸ். இது தமிழில் எலும்பு தேய்மானம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவக் குழுவினர் நடத்திய ஆய்வில் உலகளவில் 25 சதவீதம் ஆண்களுக்கும் 50% பெண்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. உணவு முறை, உடல் இயக்க முறை, மதுப் பழக்கம், புகையிலை பழக்கம் போன்ரவை இந்நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான விரிவான தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 


அதீத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அபாயம்

மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் இந்நோய் பாதிப்பு தான். வீட்டிக்கு வருமானமீட்டும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால், குடும்பத்தின் மொத்த வாழ்வாதாரமே முடங்கிவிடும். அளவுக்கு மீறி ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்னை வரும். ஆய்வுகளின் படி, ஒரு 7 நாட்களுக்கு ஆண்கள் 15 கிளாஸுகளும் பெண்கள் 8 கிளாஸுகள் மட்டுமே குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அதுவும் அதிக உடலுழைப்பு இருந்தால் மட்டுமே இந்த எண்ணிக்கை பொருந்தும். சும்மாவே இருந்துகொண்டு, அதீத ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து மாதவிடாய் பாதிக்கப்படும்.

Tap to resize

Latest Videos

போஸ்போரிக் அமலத்தில் இருக்கும் ஆபத்து 

இது என்னவோ கேட்க புதுப்பெயராக இருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். நாம் அவ்வப்போது அல்லது அடிக்கடி பருகும் சாஃப்ட் ட்ரிங்க்ஸுகளில் போஸ்போரிக் அமிலம் உள்ளது. அதுபோலவே காபியில் இருக்கும் கஃபைனிலும் இந்த அமிலம் உள்ளது. இது நமக்குள் உட்புகும் போது, எலும்புக்கு வலு கொடுக்கும் கால்ஷியம் சத்து உடலுக்குள் சேரமால் தடுக்கப்படுகிறது. இதனால் சாஃப்ட் ட்ரிங்க்ஸுகளை அடிக்கடி பருகும் நபருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு விரைவாக ஏற்பட்டு விடுகிறது.

அதிக நேரம் உட்கார்ந்தால் உங்கள் கால்கள் வீங்குகிறதா? இந்த பாதிப்பாக இருக்கலாம்..!!

செறிவூட்டப்பட்ட பால் மற்றும் அதுசார்ந்த உணவுகள்

நம் உடலுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்தம் அவசியமாக தேவைப்படுகிறது. அது இயற்கையாக கிடைக்கும் பாலை பருகும் போது மட்டுமே முழுமையாக கிடைக்கிறது. அதற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட பாலை குடிப்பதால், உடலுக்கு அச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. மேலும் இதுபோன்ற பால் மற்றும் அதிலிருந்து தயார் செய்யப்பட்ட உணவுகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ரசாயனங்கள் உள்ளன. தொடர்ந்து நீங்கள் செறிவூட்டப்பட்ட பாலை பருகி வரும் பட்சத்தில், எலும்பு தேய்மானம் பிரச்னையுடன் சேர்த்து பல்வேறு பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

அதிக சக்கரையில் ஒளிந்திருக்கும் பிரச்னை

கடந்த 2020-ம் ஆண்டு எலும்பு ஆரோக்கியம் குறித்து மருத்துவக் குழு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் அதிகமான சக்கரை உணவை சாப்பிடுபவர்களுக்கு விரைவாகவே எலும்பு தேய்மானம் பிரச்னை ஏற்படுவது தெரியவந்தது. மேலும் சாதாரண பழச்சாறு வகைகள்,  டீ மற்றும் காஃபிகளில் கூட அதிகளவு சக்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதிகளவு சக்கரை பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் வழியாக எலும்பு உறுதிக்கு தேவைப்படும் மெக்னீஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்கள் வெளியேறுவதே இதற்கு காரணம்.

பீதியை கொடுக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைப்பது எப்படி..? இதை செய்யுங்க போதும்; கவலையே வேண்டாம்..!!

ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மிகவும் அவசியம்

பிரச்னைக்குரிய இந்த பொருட்களை தவிர்த்துவிட்டு, நீண்டகால உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக தினசரி உணவுகள் ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பது அவசியம். உரிய உணவுகளை சாப்பிடுவது மட்டுமில்லாமல், உடற்பயிற்சிகள் செய்வது மற்றும் உடலை எப்போதும் இயக்கத்துடன் வைத்துக்கொள்வது எலும்பு தேய்மானத்தில் இருந்து நம்மை காக்கும். அதேசமயம் உடல் பயிற்சியையும் நாம் அளவுடன் செய்ய வேண்டும். அளவை மீறி செய்தாலும் எலும்பு தேய்மானம் பாதிப்பு ஏற்படுகிறது. 
 

click me!