பொதுவாகவே மழை மற்றும் குளிர்காலத்தில் பலருக்கு கை, கால் வலி, குத்தல் குடைச்சல் ஏற்படும். அது ஏன் அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்...
தற்போது பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பொதுவாகவே, மழைக்காலம் வந்தாலே பலருக்கு, கை, கால் வலி, குத்தல் குடைச்சல் ஏற்படும். அதுவும் குறிப்பாக வயதானோருக்கு சொல்லவே வேண்டாம். குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது இவர்கள் தான். இன்னும் சொல்லப்போனால், லேசான ஈரப்பதம் கூட இவர்களுக்கு ஒத்துக்கொள்வதில்லை. அந்த சமயத்தில் பெயின்கில்லர் தான் அவர்களுக்கு உதவும் என்று சொல்லலாம். இப்படி இவர்களுக்கு மழை மற்றும் குளிர்காலத்தில் இந்த மாதிரி வர காரணம் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...
கை, கால் வலி, குத்தல் குடைச்சல் வருவது ஏன்?
பொதுவாகவே, மழை மற்றும் குளிர்காலத்தில், superficial blood vessels என்ற மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடும். இதனால் நம் சருமத்தின் நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். நீங்கள் உன்னிப்பாக கவனித்தீர்களானால், கோடைக்காலத்தில் நம் சருமத்தின் நிறம் கருப்பாக இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் அப்படி இல்லை. இதற்கு இதுவே காரணம்.
இதையும் படிங்க: மழைக்கால நோய்கள் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த மூலிகைகள்..
அதுபோல், நாம் குளிர்காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணியாவிட்டால், குளிரானது நம் எலும்புகள் வரை பாய்ந்து, ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால் கை, கால்களில் வலி ஏற்படும். அதுமட்டுமின்றி, கை, கால் குடைச்சலுக்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். இதுதவிர, இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் உடல் எப்போதுமே, மந்தமாகவும், சோம்பேறித்தனதமாகவுமே இருக்கும். ஏன் உடற்பயிற்சி செய்ய கூட நம் உடல் ஒத்துழைக்காது. அந்த அளவிற்கு குளிரின் தாக்கம் நம்மை ஆட்டிப்படைக்கிறது.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப் பிரச்சனைகள்.. எதை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?
கை, கால் வலி, குத்தல் குடைச்சல் குறைய என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் மழை மற்றும் குளிர்காலத்தில் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிகள் செய்யலாம். இதனால் உடல் கதகதப்பாக இருக்கும். உடல் கதகதப்பாக இருந்தால், கை, கால் வலி, குத்தல் குடைச்சல் ஓரளவு குறைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதுபோல, பலர் குளிர் மற்றும் மழைக்காலத்தில் அவ்வளவாக தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால் இது தவறு. ஏனெனில், நம் உடல் தசைகளின் இயக்கத்துக்கு தண்ணீர் தான் மிகவும் அவசியம். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதனால் கூட, கை, கால்களில் வலி, தசைப்பிடிப்பு, குடைச்சல் போன்றவை ஏற்படும்.
இவற்றை கண்டிபாக சாப்பிடுங்கள்:
மழை மற்றும் குளிர்காலத்தில் கை, கால் வலி, குடைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கூட இந்த மாதிரி கை, கால் வலி, குத்தல் குடைச்சல் ஏற்படுமாம். எனவே இவற்றை உங்கள் உணவில் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்..