மழைக்காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப் பிரச்சனைகள்.. எதை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?
இந்த மழைக்காலத்தில் பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதால் வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பகோடா, சமோசா அல்லது சாட் போன்றவை மழைக்காலத்தில் அதிகம் தேவைப்பம் சிற்றுண்டிகளாக உள்ளன. மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், இந்த ருசியான சிற்றுண்டிகளுடன் இதமான வானிலையை பலரும் மகிழ்ச்சி அடைகிறோம். இருப்பினும், இந்த மாதங்களில் மிகவும் பொதுவான குடல் தொடர்பான நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இந்த மழைக்காலத்தில் பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதால் வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
குறிப்பாக வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் இவை அனைத்தும் கவனிக்க வேண்டிய வயிற்று நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும். இந்த நோய்த்தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும். எனவே இதுபோன்ற சூழலில், நன்றாக ஓய்வெடுக்கவும், சுகாதாரமான நீரை அருந்தவும், லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணவும் அறிவுறுத்தப்படுகிறது.
மழைக்காலத்தில் வயிற்றில் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள்
1-2 நாட்களுக்கு குளிர் காய்ச்சல், வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் பெரும்பாலான வயிற்று நோய்த்தொற்றுகளில் பொதுவானவை. இருப்பினும், இந்த நோய்த்தொற்றுகள் அரிதாகவே தீவிரமடைகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "பாக்டீரியா, நச்சுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ள அசுத்தமான உணவை உட்கொள்வது இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். இதனால் வாந்தி, குமட்டல், வாயுக்கள், நாள்பட்ட மலச்சிக்கல், அல்சரேட்டிவ் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஞாபக மறதியா? உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..
மழைக்காலத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது., ஏனெனில் அவை செரிமான செயல்முறையை மெதுவாக்கும், இதனால் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் ஏற்படலாம். குறிப்பாக தெருக்களில் சாட் அல்லது ஜூஸ் சாப்பிடுவது வயிற்றில் தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
மழைக்காலத்தில் வயிற்று நோய்த்தொற்றுகளை தடுக்க என்ன சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும்
இந்த வயிற்று நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க, ஆரோக்கியமான பாக்டீரியா அல்லது புரோபயாடிக்குகளை உணவில் சேர்க்கலாம்.
பழைய உணவுகளை தவிர்க்கவும். புதிதாக சமைத்த உணவுகளை உட்கொள்ளவும். சமச்சீரான உணவு, தினசரி உடற்பயிற்சி, ஜங்க் ஃபுட், காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடிப்பது நல்லது.
தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க கை சுகாதாரத்தைப் பின்பற்றவும்.
மழைக்காலத்தில் தண்ணீர் மாசுபடுவதால் கடல் உணவுகளை உண்ணாதீர்கள். மீன் சாப்பிடுவதால் காலரா அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
சாலையோரங்களில் வெட்டப்பட்ட பழங்களை உண்ணாதீர்கள், ஏனெனில் அவை பாக்டீரியாவால் மாசுபடலாம்.
பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டாம், ஏனெனில் அவை கிருமிகளால் நிறைந்திருக்கும். குடலுக்கு உகந்த மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய லேசான உணவுகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி மற்றும் எலுமிச்சையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தயிர் அல்லது மோர் போன்ற புரோபயாடிக்குகளை நிறைய சாப்பிடுங்கள். ஏனெனில் அவை நமது செரிமான அமைப்பில் செயல்படும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் நல்ல பாக்டீரியாவைக் கொண்டுள்ளன.
உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க பச்சையான காய்கறிகளுக்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். பச்சைக் காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கலாம். இது உங்கள் குடலை மோசமாக்குகிறது.
அமிலத்தன்மை மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும் வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
டெங்கு எச்சரிக்கை: இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..
- diabetes diet for monsoon
- diet
- diet tips in monsoon
- foods to avoid during monsoon
- indian monsoon diet
- monsoon
- monsoon care
- monsoon diet
- monsoon diet ayurveda
- monsoon diet plan
- monsoon diet plan for weight loss
- monsoon diet plan in hindi
- monsoon diet tips
- monsoon diet to lose weight
- monsoon foods
- monsoon indian diet
- monsoon season
- monsoon tips
- monsoon weight loss diet plan
- rainy season diet plan
- weight loss diet
- weight loss diet plan for monsoon