Honey: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் தேனை எப்படி உட்கொண்டால் நல்லது?

By Dinesh TG  |  First Published Nov 29, 2022, 11:06 AM IST

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.


இயற்கையில் நமக்கு கிடைக்கும் தேனில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தேனை சாப்பிடுவதன் மூலம், நாம் பல விதமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். காயங்களை குணப்படுத்தும் திறனும், நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனும் தேனில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

இதய ஆரோக்கியம்  

Latest Videos

undefined

தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என பல்கலைகழகம் ஒன்று நடத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

சளித்தொல்லைக்கு தீர்வு

தேனில் செயற்கையான நிறமிகள் ஏதுமில்லை. குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருப்பின், இதனை சரி செய்வதற்கு மாத்திரை மற்றும் மருந்துகளை கொடுப்பதை தவிர்த்து, தேன் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும்.

Coconut: தூங்குவதற்கு முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

உயர் இரத்த அழுத்தம் குறையும்

பூக்களில் இருக்கும் திரவத்தை எடுத்து தான், தேனீக்கள் தேனை சேமிக்கிறது. தினந்தோறும் 2 டீஸ்பூன் அளவு தேன் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் குறையும். அதோடு கெட்ட கொலஸ்டராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயர்கையாகவே தேனில் 80% சர்க்கரை இருக்கிறது. இது அரிதான சர்க்கரைகள், புரதங்கள் மற்றும் கரிம அமிலங்கள் ஆகிய பல கலவைகளை உள்ளடக்கி உள்ளது. சர்க்கரை சிரப் அல்லது வேறு இனிப்பு வகைகளுக்கு மாற்றாக தேனை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கிறது.

பதப்படுத்தப்படாத தேன்

பதப்படுத்தப்பட்ட தேன், பாஸ்டுரைசேஷனுக்குப் பின்னர், அதனுடைய பல ஆரோக்கிய நன்மைகளை இழக்கிறது என கணடறியப்பட்டுள்ளது. செயற்கையான நிறமிகள் எதையும் சேர்க்காமல் பதப்படுத்தப்படாத தேன் தான் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினந்தோறும் 35 முதல் 45 கிராம் பதப்படுத்தப்படாத தேனை சாப்பிடுவது மிகவும் சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர். 

click me!