காஞ்சி ஸ்பெஷல் இட்லியா? இட்லியில் என்ன வித்தியாசம் இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? வாங்க! இன்றைய பதிவில் காஞ்சி ஸ்பெஷல் இட்லியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் என்றவுடன் நாம் அனைவருக்கும் நினைவில் வருவது காமாட்சி அம்மன் திருத்தலம்,பின் காஞ்சி பட்டு புடவை. அந்த வரிசையில் அடுத்ததாக காஞ்சிபுரத்தின் புகழ் வரதராஜர் பெருமாள் கோவில் ஸ்பெஷல் இட்லி. இதனை தான் தினமும் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
காஞ்சி ஸ்பெஷல் இட்லியா? இட்லியில் என்ன வித்தியாசம் இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? வாங்க! இன்றைய பதிவில் காஞ்சி ஸ்பெஷல் இட்லியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் காலை மற்றும் இரவு உணவு பட்டியலில் இட்லி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. தவிர தினமும் காலை உணவாக இட்லியை சிறிய குழந்தைகள் முதல் வயதனவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்களே அறிவுறுத்தி வருகிறார்கள்.
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி -1 கப்
பச்சரிசி- 1 கப்
உளுத்தம் பருப்பு -1 கப்
புளித்த கெட்டி தயிர்- 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -2 சிட்டிகை
நெய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு- தேவையான அளவு
Welcome Drink : இனி கெஸ்ட்டுக்கு இப்படி வெல்கம் ட்ரிங்க் செய்து கொடுங்க!
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசிகளை போட்டு நன்றாக அலசி விட்டு பின் அதில் தண்ணீர் ஊற்றி கிட்டதட்ட 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் அதே போல் மற்றொரு பாத்திரத்தில் ரவையை சுத்தம் செய்து விட்டு, தண்ணீர் ஊற்றி அதனையும் 6 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆறு மணி நேரத்திக்கு பிறகு, அரசி மற்றும் ரவையை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு, ஒரு கிரைண்டரில் போட்டு நைஸான மாவாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாவில் இப்போது உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு சுமார் 8 மணி நேரம் வரை புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
8 மணி நேரத்திற்கு பிறகு மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம், பொடித்த மிளகு, தயிர், நெய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் இட்லி தட்டில் சிறிது நெய்யை சுற்றி தடவி கொண்டு, மாவினை ஊற்ற வேண்டும். இதே போன்று அனைத்து தட்டுகளின் மீதும் சிறிது நெய் விட்டு பரப்பி, மாவினை ஊற்ற வேண்டும்.
பின் இட்லி பாத்திரத்தை மூடி விட்டு, கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரை வேக வைத்து விட்டு இறக்கி கொள்ள வேண்டும். அவ்ளோ தாங்க சூப்பரான காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி ரெடி!!! இதற்கு தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இதனை ட்ரை பண்ணி பாருங்க.