வீட்டிற்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் என்று கெஸ்ட் வந்துட்டாங்களா? அவர்களை வரவேற்க ஸ்பெஷலா புதுமையா செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
வழக்கமாக வீட்டில் வரும் கெஸ்ட்களுக்கு டீ ,காபி, ஜூஸ் என்று செய்து தராமல் இப்படி ஒரு முறை செய்து பாருங்க. அருமையாக இருக்கும் இதனை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள். குறிப்பாக குழந்தைகளை இதனை மிச்சம் வைக்காமல் குடித்து மகிழ்வார்கள். வாங்க! சூப்பரான வெல்கம் ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டி பால்- 1/2 லிட்டர்
கடற்பாசி பவுடர்- 4 ஸ்பூன்
சர்க்கரை-3 ஸ்பூன்
புட் கலர்- 1 சிட்டிகை
ஜவ்வரிசி-1/2 கப்
மில்க்மேட்- 2 ஸ்பூன்
அரைத்த மசாலாவின் சுவையில் சுவையான காராமணி கிரேவி செய்து பார்க்கலாமா!
செய்முறை:
முதலில் பாலை 1 சாஸ் பானில் ஊற்றி,தண்ணீர் சேர்க்காமல் , சிம்மில் வைத்து கொதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பால் ஆறிய பிறகு அதனை ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கிண்ணத்தில் கடற்பாசி பவுடர், சர்க்கரை மற்றும் 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பின் புட் கலர் சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.கலவை ஆரிய பிறகு அதனை பெரிய தட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும். கலவை ஆறிய பிறகு, கத்தி வைத்து ஒரே அளவிலான சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஜவ்வரிசியை இருமுறை அலசிவிட்டு ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஊறிய ஜவ்வரிசியை குக்கரில் போட்டு 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் அடங்கிய பிறகு, குக்கரை திறந்து வெந்துள்ள ஜவ்வரிசியை 2 முறை கழுவி வடிகட்டி தனியாக எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஃப்ரிட்ஜில் இருக்கும் பாலை எடுத்து, ஒரு பௌலில் அல்லது கண்ணாடி க்ளாசில் ஊற்றி, அதில் வேக வைத்த ஜவ்வரிசி கொஞ்சம் சேர்த்து, சில ஜெல்லிகள் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் இந்த க்ளாசில் சிறிது மில்க்மேட் சேர்த்து கொஞ்சம் மிக்ஸ் செய்து விட்டு, மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, விருந்தினர்கள் வந்த பிறகு இதனை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பரிமாறினால் சூப்பரான வெல்கம் ட்ரிங்க் ரெடி!