
உடல் எடை முயற்சியில் ஈடுப்படுவோர் முதலில் தேர்வு செய்வது கிரீன் டீ தான். ஏனெனில் கிரீன் டீ இருக்கும் சில குறிப்பிட்ட வகை அன்டி-ஆக்ஸிடன்ட்கள் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான் உலகம் முழுவதும் ஆரோக்கியமான எடை இழப்பு கிரீன் டீ பரிந்துரைச் செய்யப்படுகிறது.
கிரீன் டீ குடிப்பதற்கு வெறும் தண்ணீர் போல தான் இருக்கும். ஆனால் அதில் பிற உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடையாது. கலோரிகளும் இதில் இல்லை. ஆனால் கிரீன் டீயில் நம் குடலுக்கு நன்மை பயக்கும் ப்ரோ பயோடிக் பண்புகள் அதிகமாகவே இருக்கின்றது. இதுதவிர, கிரீன் டீயில் வைட்டமின் பி, மக்னீசியம், பிளவாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகமாகவே இருக்கின்றது.
கிரீன் டீ குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் :
- கிரீன் டீயில் இருக்கும் கெட்டிசின் என்னும் மூலப்பொருள் நம்முடைய உடலில் மெட்டபாலிசத்தை தூண்டும்.
- உடற்பயிற்சி செய்த பிறகு கிரீன் டீ குடித்து வந்தால் உடலை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவும். மேலும் உடற்பயிற்சியின் போது ஏற்படும் தசை பிடிப்புகள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் உதவும்.
- கிரீன் டீயில் இருக்கும் பண்புகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகள் குறையும்.
- புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் கிரீன் டீயில் உள்ளன.
- சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.
- முக்கியமாக எடையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.
எடையை குறைக்க கிரீன் டீ எவ்வாறு உதவுகிறது?
கிரீன் டீயில் கொழுப்பு கிடையாது. ஆனால் இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தில் கலந்து கொழுப்பு எரிக்கும் ஹார்மோன்களை தூண்டி, எடையை குறைக்கச் செய்யும்.
எடையை குறைக்க கிரீன் டீயை எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்?
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உடற்பயிற்சிக்கு பிறகு கிரீன் டீ குடித்தால் ரொம்பவே நல்லது. மேலும் ஒரு நாளைக்கு 2-3 கப்பரை கிரீன் டீ குடிக்கலாம்.
கிரீன் டீ தயாரிக்கும் முறை :
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரைக் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து பிறகு அடுத்து அணைத்துவிட்டு சில நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு அதில் க்ரீன் டீயை சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கவும்.
க்ரீன் டீயை எப்போதெல்லாம் குடிக்க கூடாது?
- காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கவே கூடாது. மீறினால் வாயு தொல்லை மற்றும் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும்.
- சாப்பிட்டு முடித்ததும் கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் இது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை கழிவாக வெளியேற்றிவிடும்.
- அதுபோல இரவு தூங்கும் ஒருபோதும் கிரீன் டீ குடிக்கவே கூடாது. மீறினால் அது மூளையை சுறுசுறுப்பாக்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கும்.
- மருந்து, மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பது நல்லதல்ல.
உடல் எடையை குறைக்க கிரீம் டீ குடிப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.