கோடைகாலத்தில் வரும் உஷ்ணக் கட்டிகளை உடனே சரியாக சில வீட்டு வைத்தியம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
How to Get Rid of Body Heat Boils: கோடைகாலம் ஆரம்பமாச்சு. கூடவே பல பிரச்சினைகளும் வரும். அவற்றில் ஒன்றுதான் உஷ்ண கட்டிகள். ஆம், கோடை காலத்தில் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு உஷ்ணகட்டிகள் அதிகமாகவே வரும். கோடை கட்டிகள் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் போல் வீங்கி வலியை கொடுக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி இந்த கட்டிகளை எளிதாக குணப்படுத்தி விடலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடைகால உஷ்ண கட்டிகளை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்:
1. அவுரி இலை மற்றும் அல்லி இலை:
குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் உஷ்ணம் கட்டிகள் வந்தால் அவுரி இலை மற்றும் அல்லி இலைகளையும் சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து அதை கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் நாளடைவில் கட்டி உடைந்து விடும்.
2. பூண்டு
கிருஷ்ண கட்டிகள் இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து கட்டிகள் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால் கட்டிகள் சீக்கிரமாகவே பழுத்து உடைந்து விடும். வெள்ளைப்பூண்டு சிறிதளவு எரிச்சல் தன்மை உடையது என்பதால் குழந்தைகளுக்கு இதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
3. மல்லிகை பூ
பச்சிளம் குழந்தைகளுக்கு உஷ்ண கட்டி வந்தால் மல்லிகை பூவை அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் கட்டிகள் நாளடவில் அமுங்கிவிடும். மேலும் இது குழந்தைகளுக்கு இதமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலில் கூட உடலை சுறுசுறுப்பாக வைக்கும் உப்பு மற்றும் சர்க்கரை நீர்!
4. விளக்கெண்ணெய்
உஷ்ண கட்டிகள் வீங்கி பழுத்துப் போய் இருந்தால் உள்ளிருக்கும் சீழுடன் வெளியேற்ற விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். இதற்கு விளக்கெண்ணையை லேசாக சூடுபடுத்தி அதை கட்டிகள் மீது தடவி வந்தால் போதும் கட்டிப்பழுத்து தானாக உடைந்து விடும்.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்; உடல் சூட்டை தணிக்க குடிக்க வேண்டிய '5' பானங்கள்
5. சீரகம்
உஷ்ண கட்டிகள் வந்தால் சீரகத்தை தேங்காய் பாலுடன் சேர்த்து அரைத்து, அதை விழுதாக எடுத்து கட்டிகள் மீது தடவி வந்தால், ரெண்டு நாட்களிலேயே கட்டிகள் உடைந்து விடும்.
6. மஞ்சள்:
கோடை காலத்தால் கட்டிகள் வந்தால் அது வீக்கத்துடன் இருந்தால் அதன் உள்ளே கிருமிகள் கண்டிப்பாக இருக்கும். எனவே இதற்கு மஞ்சள் அரைத்து அதை சுட்டு கட்டி மீது பற்றுபோல் போட வேண்டும். இப்படி செய்தால் கட்டியின் வீக்கம் குறைந்து சீக்கிரமாகவே உடைந்து விடும். மஞ்சள் கிருமி நாசினி பண்பு உள்ளதால் பாதிப்பு ஏதும் வராது.
7. ஊமத்தம் இலை
வேங்க கட்டி வந்தால் நீங்கள் ஊமத்தை இலையை பயன்படுத்தலாம். இதற்கு ஊமத்தம் இலையை நன்றாக சுத்தம் செய்து அதில் விளக்கினை தடவி, தீயில் காட்டி பிறகு கட்டி மீது வைத்து ஓற்றறி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடவில் கட்டி உடைந்து விடும். ஆனால் கண்களில் மட்டும் வைக்கக்கூடாது என்பதில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.