நீரிழிவு நோயாளிகள் செம்பருத்தி டீ குடிக்கலாமா? நயன்தாரா பதிவும் டாக்டரின் எதிர்வினையும்

Published : Jul 30, 2024, 10:33 AM ISTUpdated : Sep 27, 2024, 10:27 PM IST
நீரிழிவு நோயாளிகள் செம்பருத்தி டீ குடிக்கலாமா? நயன்தாரா பதிவும் டாக்டரின் எதிர்வினையும்

சுருக்கம்

செம்பருத்தி டீ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது முகப்பரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளது என்று நடிகை நயன்தாரா பதிவிட்டு இருந்தார்.

இதயநோய்க்கு செம்பருத்திப்பூ நல்ல மருந்து. காலையில் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதய நோய் குணமாகும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள், செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம். செம்பருத்திப்பூக்கள் படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது. பருவமழை காலத்தில் செம்பருத்தி பூக்களை பறித்து தேநீர் போல குடிக்கலாம் என்றும் சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையே நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனை எனது உணவுத் திட்டத்தில் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.

கிராம்பு டீயில் இத்தனை நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா விட மாட்டீங்க!

இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தரக்கூடியது என்பதால் முகப்பரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளதால் செம்பருத்தி தேநீர் மழைக்காலத்துக்கு மிகவும் சிறந்தது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்கும். ஆன்டிபாக்டீரியல் என்பதால் பருவகால தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாராவின் பதிவை கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா, சமந்தாவை விட இரண்டு மடங்கு அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 8.7 மில்லியன் ஃபாலோவர்களை செம்பருத்தி டீ குடிக்க கோரியுள்ளார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று நோய், முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு செம்பருத்தி டீ பயனாக இருக்கும் என்ற அவரது கூற்று எதுவும் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை.

Breast Shape: மார்பகங்கள் எடுப்பா அழகா தெரிய என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நயன்தாராவின் இந்தப் பதிவு அவரது "பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான" விளம்பரம் போலவும் தெரிகிறது. எதைப் பற்றியும் தெரியாமல் தவறான தகவல்களால் தனது ஃபாலோவர்ஸ்களை தவறாக வழி நடத்துகிறார். செம்பருத்தி தேநீரின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம்” என பதிவிட்டு, அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்துவிடுவார்கள்” என்று பதிலுக்கு பதிவிட்டுள்ளார். முன்னதாக, இதே மருத்துவர் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?