இத்தொகுப்பில் நாம் வெண்டைக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்..
பொதுவாகவே சில காய்கறிகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். உதாரணமாக சிலருக்கு கத்தரிக்காய், பாகற்காய் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு உள்ளது. அந்தவகையில், வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள் குறித்து இங்கு பார்க்கலாம்..
பொதுவான அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம்.
அதுபோல் கொக்கோ மற்றும் செம்பருத்தி பூ, இந்த இரண்டு அலர்ஜி உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிட கூடாது.
சிலர் சிறுநீரக கல் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பர். இருவர்களும் சிறுநீரகம் சம்மதமான பிரச்சனை உள்ளவர்களும் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவத்களும், வாயு வீக்கம், வயிற்றுப்போக்கு அவதிபடுபவர்களும் ஒருபோதும் வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்படவர்கள் வெண்டைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளவது நல்லது.
குறிப்பாக நோயாளிகள் குறைந்த அளவு எண்ணெய்யில் வெண்டைக்காய் சமைத்து சாப்பிட வேண்டும்.
அதுபோல் இரத்தம் உறைதல் பிரச்சினை உள்ளவர்களும், அதற்காக மருந்துகள் சாப்பிடுபவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது.
வெண்டைக்காய் இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் கே நிறைந்துள்ளது..