Anise Milk: பாலுடன் சோம்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ உங்களுக்காக!

By Dinesh TGFirst Published Dec 15, 2022, 7:57 PM IST
Highlights

பாலில் சோம்பு கலந்து குடித்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

புரதச்சத்து அதிகம் நிறைந்த ஓர் உணவு பால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாலை விரும்பி குடிப்பார்கள். அனைவருக்குமான ஒரு உணவாக பால் உள்ளது. பாலில் நிறைவான அளவில் கால்சியம் இருப்பதால், தினந்தோறும் பால் குடித்து வந்தால் உடல் எலும்புகள் வலுவடையும். பாலுடன் மஞ்சளைக் கலந்து குடித்தால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல், பாலில் சோம்பு கலந்து குடித்தாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

மூலிகைத் தாவரம் சோம்பு 

மருத்துவத்தில் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் தான் சோம்பு. மருத்துவ உலகில் பல வியாதிகளுக்கு அருமருந்தாக சோம்பு பயன்பட்டு வருகிறது. இது ஆயுர்வேத மருத்துவம் முதல் இயற்கை மருத்துவம் வரை அனைத்திலும் பல்வேறு நன்மைகளை செய்கிறது. சோம்பு சாப்பிடுவதால் நமது உடல் சுத்தமடையும். இதில் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளது. சோம்பை பாலுடன் கலந்து குடித்து வந்தால் இன்னமும் பல விதமான பயன்களை தர வல்லது.

குழந்தைகள் விரும்பும் "வெண்ணிலா கப் கேக்" வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

சோம்பு பால் குடிப்பதன் நன்மைகள்

பாலில் சோம்பு கலந்து அடிக்கடி குடித்து வந்தால் செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி விடும். பொதுவாகவே சோம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவி புரிகிறது.

சிலருக்கு வாய் துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருக்கும். இவர்கள் வாய் துர்நாற்றத்தைப் போக்க வேண்டும் எனில், பாலுடன் சோம்பு கலந்து குடிப்பது மிகந்த நன்மையை அளிக்கும்.

பாலுடன் சோம்பு கலந்து குடிப்பது கண்களுக்கு நன்மையை அளிக்கிறது. சோம்பை சர்க்கரை மிட்டாய் உடன் சேர்த்து சாப்பிட்டால், கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் இருந்தால், அடிக்கடி சோம்பை சாப்பிடுவதன் மூலம், இந்த பிரச்சனையில் இருந்து மிக எளிதாக விடுபட்டு விடலாம். ஆகவே மாதவிடாய் காலத்தில் பால் குடிக்க ஆசைப்பட்டால், சோம்புடன் கலந்து குடிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

சோம்பு கலந்த பாலைக் குடிப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே, மாணவர்கள் இரவில் படிக்கும் நேரத்தில், டீ மற்றும் ஃகாபிக்கு பதிலாக சோம்பு பால் குடிக்கலாம். இது, மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த சோம்பு பாலை, அனைவரும் அவசியம் குடிக்க வேண்டும். தங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சோம்பு பால் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

click me!