உங்கள் குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கிறீர்களா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீங்க..!

Published : Jan 08, 2024, 04:04 PM ISTUpdated : Jan 08, 2024, 04:13 PM IST
உங்கள் குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கிறீர்களா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீங்க..!

சுருக்கம்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் பாட்டிலில் பால் கொடுக்கும் முன் சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் அவசியம். இல்லையெனில், அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பொதுவாகவே, புதிதாக பிறந்த குழந்தைக்கு பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் முழு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தாய்பாலில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தாய்க்கு போதிய பால் கிடைக்காத காரணத்தினாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையாலோ குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுப்பார்கள். 

மேலும் பாட்டில் பால் குழந்தைகளுக்கு கேடு. எனவே தான் மருத்துவர்கள் அதனை பரிந்துரைப்பதில்லை. ஆனால் சில காரணங்களால் உங்கள் குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்க வேண்டியிருந்தால், சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இல்லையெனில், குழந்தையின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் நிலைமை மோசமடைய செய்யும்.

பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும்:
நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கிறீர்கள் என்றால், சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். ஏனெனில் சிறு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது. இதற்காக குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்யவும். இது தவிர, பாட்டிலை சூடான நீரை வைத்து சுத்தம் செய்யவும். குழந்தை பாட்டிலை சுத்தம் செய்யும் தூரிகைகளை ஒரு சுத்தமான இடத்தில் தனியாக வைக்கவும். 

இதையும் படிங்க:   உங்கள் குழந்தை இரவில் தூங்கவில்லையா..? அடிக்கடி அழுகிறதா? காரணங்கள் இதுதான்..

ஒரே பாட்டிலை நீண்ட நாள் பயன்படுத்தக் கூடாது:
பால் பாட்டில்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் ஆகும். அதனால்தான் சில நாட்களுக்குப் பிறகு அதை மாற்ற வேண்டியது அவசியம். ஏனெனில் பெரும்பாலான பிளாஸ்டிக் பாட்டில்களில் BPA பூச்சு இருக்கும். ஆனால் பலர் ஒரே பாட்டிலை நீண்ட நேரம் பயன்படுத்துவார்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும், பாட்டிலுடன் இணைக்கப்பட்ட முலைக்காம்பைத் தவறாமல் மாற்றவும்.

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாதுனு சொல்லுறாங்களே.. அது ஏன் தெரியுமா?

பாட்டிலுக்கு சரியான முலைக்காம்பைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்:
உணவளிக்க நீங்கள் பயன்படுத்தும் முலைக்காம்பு மென்மையாகவும், சரியான அளவில் இருக்க வேண்டும். இதனால் குழந்தை பால் குடிக்க எளிதாகும். முலைக்காம்பின்  துளை பெரிதாக இருக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், குழந்தை பால் குடிப்பதில் சிரமம் ஏற்படும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாட்டில் பால் கொடுக்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள்:
குழந்தையை உங்கள் மடியில் வைத்து, ஒரு கையை அவரது தலையின் கீழ் வைத்து கொடுக்க வேண்டும். ஆனால் பலர் குழந்தையை படுக்க வைத்து கொடுப்பார்கள். இது தவறு. இதனால் அதிக பால் குழந்தையின்  தொண்டைக்குள் நிரம்பி இருக்கும். சில சமயம் பால் மூக்கு வழியாக வந்துவிடும்..இவ்வாறு செய்தால், குழந்தைக்கு பாதிப்பு வரும்.  பல நேரங்களில்  நிலைமை தீவிரமடையலாம். அதனால்தான் பாட்டில் மூலம் பால் ஊட்டும்போது குழந்தையை எப்போதும் மடியில் படுக்க வைத்து தான் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?