பெண்களுக்கு உடலுறவின் மீதான ஆர்வம் குறைய காரணம் என்ன? நிபுணர்கள் சொல்லும் சில உண்மைகள் இதோ!

By Ansgar R  |  First Published Jan 7, 2024, 11:05 PM IST

Decreased Sex Drive : உண்மையைச் சொல்லப்போனால், பெண்களின் பாலியல் ஆசை என்பது அவர்களின் வயதை பொறுத்து மாறுகிறது. பிறப்புறுப்பு வறட்சி, ஆண்மை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகிறது.


உடல் ரீதியான பிரச்சனைகள்

பெண்களுக்கு பல காரணிகளால் உடலுறவின்மீதான ஆர்வம் குறைகின்றது, அவர்களுக்கு செய்யப்படும் அறுவைசிகிச்சை கூட பெண்களுக்கு உடலுறவில் ஆர்வத்தை இழக்கச் செய்யலாம். ஒரு பெண்ணின் பாலியல் வாழ்க்கை, குறிப்பாக பிறப்புறுப்பு அல்லது மார்பகத்தின் சிகிச்சையால் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். 

Tap to resize

Latest Videos

undefined

மேலும், உயர் இரத்த அழுத்தம் பெண்களின் உடலுறவுக்கான விருப்பத்தையும் குறைக்கிறது. இதன் காரணமாக, பிறப்புறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சரியாக வருவதில்லை. இதனால் அவர்கள் உற்சாகமடைவது கடினம். மேலும் பிறப்புறுப்பு வறட்சியின் காரணமாக அவர்கள் ஒரு நல்ல உடலுறவிற்கான மனநிலையில் இருப்பதில்லை.

Botox : 50 வயதிலும் பிரபலங்கள் இளமையாக இருக்க இதுதாங்க காரணம்!

ஹார்மோன் மாற்றங்கள்

மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு கடுமையாக குறைகிறது. இதனால் பெண்களுக்கு உடலுறவில் 
ஆர்வம் இல்லாமல் போகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் யோனி திசுக்கள் வறண்டு போகும். இந்த நேரத்தில், உடலுறவு வலியை ஏற்படுத்தும். மேலும், கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக, இந்த நேரத்தில் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதில்லை.

உளவியல் காரணங்கள்

மனநலம் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கிறது. அதாவது அதிக சிந்தனை, டிமென்ஷியா அல்லது ஞாபக மறதி, எதிர்மறையான பாலுறவு அனுபவங்கள், பதட்டம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் துணைக்கும் உங்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்படுகிறதா? எப்படி சரிசெய்வது.. சில டிப்ஸ் இதோ..

click me!