ஓம இலைகளின் சாற்றில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? வீட்டுல கண்டிப்பா இந்த செடியை வளர்க்க ஆரம்பிங்க!!

By Ma riyaFirst Published May 27, 2023, 7:45 AM IST
Highlights

Ajwain Leaves: கற்பூரவல்லி இலைகள் என அழைக்கப்படும் ஓம இலைகளின் சாற்றில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டால் இன்றைக்கே வீட்டில் வாங்கி வைத்து வளர்க்கத் தொடங்கிவிடுவீர்கள். 

Tamil health tips Ajwain Leaves benefits: கற்பூரவல்லி (Karpooravalli) என அழைக்கப்படும் ஓம இலைகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை உள்ளன. இது உங்களுடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் காணப்படும் நச்சுக்களை வெளியேற்றும். ஓம இலைகளை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். ஓம இலைகளில் உள்ள கரோட்டினாய்டுகள், வைட்டமின்-ஏ ஆகியவை கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

ஓம இலைகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. மூட்டுவலி வலியைக் குறைத்தல், மன அழுத்தம், பதட்டத்தை நீக்குதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். வீட்டில் கண்டிப்பாக இந்த ஆயுர்வேத செடியை நட்டு வளருங்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், சுவாச பிரச்சனைகளுக்கு இது சிறந்தது. 

ஜலதோஷம் 

உங்களுக்கு ஜலதோஷத்தால் மூக்கு ஒழுகுதல் பிரச்சினை ஏற்பட்டால் ஓம இலை வைத்து வைத்தியம் செய்யலாம். ஓம இலைகளை பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் சூடாக்கவும். அதன் சாற்றை பிழிந்து நெற்றி, மார்பில் நன்கு தடவவும். இதனால் சளி வெளியேறும். இதனுடைய சாற்றை அருந்துவதால் தொண்டை நோய்த்தொற்று, இருமல் குறையும். ஓம இலைகளின் சாறு குடித்து வந்தால் காய்ச்சல் குறையும். 

பூச்சி கடி 

ஓம இலைகளின் சாற்றை பூச்சி கடித்த இடத்தில் போடலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பை தடுக்கும். சிறிய காயங்கள், கீறல்களிலும் இது பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படிங்க: கொரோனாவை விட கொடிய ஜாம்பி வைரஸா 'Disease X'? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையின் பின்னணி என்ன?

மூட்டுவலி வலி 

ஓம இலைகள் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் செலரி இலைகளை அரைத்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும். இதன் சாற்றையும் அருந்தலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் 

ஓம இலைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-வைரல் பண்புகள் உடையது. இதை ஜூஸாக தயாரித்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஓம இலைகளில் உள்ள தைமால் பாக்டீரியா தொற்றுகளை தடுக்கிறது. ஓம இலைகளின் சாற்றில் இரும்புச்சத்து, புரதம், வைட்டமின்-சி நிறைந்துள்ளது. இதை குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். 

செரிமான அமைப்பு 

ஓம இலைகளின் சாறு வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அசிடிட்டி, மலச்சிக்கல், வாயு பிரச்சனைகள் ஓம இலை சாற்றை அருந்தினால் நீங்கும். 

இதையும் படிங்க: குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க... கர்ப்பிணிகள் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்! 

click me!