வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு... இந்த 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?

By Ma riya  |  First Published Jun 21, 2023, 10:30 AM IST

ஆண்டுக்கணக்கில் சர்க்கரை நோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு மூக்கிரட்டை கீரை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 


மூக்கிரட்டை கீரை ஓர் ஆயுர்வேத மூலிகை. இதை சமைத்து பொரியலாகவும் உண்ணலாம் அல்லது பொடியாக வாங்கியும் பயன்படுத்தலாம். இரண்டுமே நல்லதுதான். உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். சர்க்கரை நோய்க்கு பல ஆண்டுகளாக மருந்து எடுத்துக் கொண்ட ஒருவர் சிறுநீரகமும் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டுள்ளார். அவருக்கு மூக்கிரட்டை கீரையில் தான் நிவாரணம் கிடைத்தது. இதனால் கிடைக்கும் மற்ற நன்மைகளையும் காணலாம். 

மூக்கிரட்டை கீரை நன்மைகள்: 

  • மூக்கிரட்டை கீரையின் பொடியை வாங்கி உண்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதயம் வலுவாகும். கண் பார்வைக்கும், செரிமானத்துக்கும் கூட நல்லது. 
  • ஆண்களின் விறைப்புத்தன்மை கோளாறு, ஆண்மைக்குறைவு ஆகியவை சரியாகும். சில புற்றுநோயை எதிர்த்து செயலாற்ற ஆற்றல் கிடைக்கும். 
  • மூக்கிரட்டை கீரையை சாறாக்கி குடித்தால் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு குறையும். இன்சுலின் அளவும் மேம்படும். உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உணவுக்கு முன்பாக இந்த கீரை சாறு 10 மில்லி குடியுங்கள். தொடர்ந்து செய்யும்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். 
  • மூக்கிரட்டையின் வேரை பொடியாக்கி அரிசி கழுவிய நீரில் 2கி மட்டும் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: இரத்தத்தில் சர்க்கரை அளவை எகிற வைக்கும் 3 மாவுகள் எவை தெரியுமா? தவறுதலா கூட சுகர் இருக்கவங்க சாப்பிடாதீங்க!!

  • பித்தப்பை கற்களால் அவதிபடவர்கள் மூக்கிரட்டையின் முழுச்செடியையும் எடுத்து இளநீருடன் அரைத்து எடுங்கள். இதனை சிறு நெல்லி அளவில் தினமும் உண்ண வேண்டும். தொடர்ந்து இப்படி உண்பதால் பித்தப்பை கற்கள் நீங்கும். சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களும் செய்யலாம்.  
  • மூக்கிரட்டையின் வேர் கஷாயமாக நாள்தோறும் 30-40 மில்லி குடியுங்கள். இதனால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி மாயமாகும். கணுக்காலின் வீக்கமும் குறைந்துவிடும். 
  • சிறுநீரகக் கல் இருப்பவர்கள் மூக்கிரட்டையின் விதைகளை 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம். இதனால் சிறுநீரகக் கல் வெளியேறிவிடும். 

மூக்கிரட்டை கீரை செய்முறை: 

மூக்கிரட்டை கீரையை வாங்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனை பொரியல் செய்ய ஏற்ற வகையில் நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் வழக்கமான தாளிப்பு செய்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். தாளிக்கும்போது விருப்பத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய பின் கீரை சேர்த்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு வேகவையுங்கள். இந்த பொரியலை அடிக்கடி உண்பதால் உடலுக்கு மேற்கூரிய நன்மைகள் கிடைக்கும். 

இதையும் படிங்க: கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? அப்ப தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! நம்ப முடியாத பலன்கள்

click me!