புளிப்பும் இனிப்பும் கலந்த கிவி பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த தாதுக்கள் நிறைந்துள்ளன. இப்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு சக்கரை நோய் இருந்தால், கட்டுக்குள் வரும். அதேபோன்று கிவி பழத்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா பிரச்னையும் குணமடையும்.
உண்பதற்கு தகுந்த பழங்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் பல தீராத நோய்கள் கூட குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் கிவி. இதனுடைய இனிப்பு புளிப்பு சுவை தனித்துவமானது. இதில் பல வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அவர்களுக்கு விரைவில் நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும். அதேபோன்று மூச்சுத்திணறல், ஆஸ்துமா பிரச்னை கொண்டவர்களும் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
கிவிப் பழத்தில் நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட், செம்பு, பொட்டாஸியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் அவ்வப்போது, கிவிப் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சக்கரை, சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தான் கிவிப் பழத்தை சாப்பிட வேண்டும் என்று இல்லை. குறிப்பிட்ட நோய்களை வராமல் தடுக்கவும் இந்த பழத்தை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிரீன் டீ vs புரோட்டீன் ஷேக்: உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிவது எது..??
கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மேல் ஆஸ்துமா, மேல் சுவாசக்குழாய் திணறல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்துவிடலாம். மேலும் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நுரையீரல் செயல்பாடும் மேம்படுகிறது. கிவியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இரைப்பைக் குழாயில் உள்ள உணவில் இருந்து இரும்பை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும்.
இதன்மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. கிவி மூளையில் செரோடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் ஒழுங்கற்ற தூக்கத்தை குணப்படுத்த உதவுகிறது. இதன்மூலம் உடலும் மனதும் அமைதி பெறுகிறது.