Fish Eyes Benefits : மீனின் கண்ணை இதுவரை சாப்பிட்டதில்லையா? பெரிய தப்பு பண்ணிட்டீங்க!! எக்கச்சக்க நன்மைகள்

Published : Jul 18, 2025, 07:47 PM IST
9 Healthy Fish list

சுருக்கம்

மீன் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் மீனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் அவை ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்கும். மீனில் இருக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்து ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தான். இந்த ஊட்டச்சத்தானது மீனில் வளமாக நிறைந்துள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், சிலர் மீன் சாப்பிடும் போது அதன் சதை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள். தலையை சாப்பிட்டாலும் அதன் கண்ணை தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆனால் மீன் கண்ணில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன தெரியுமா? நீங்களும் இதே தப்பை செய்கிறீர்களா? இனி அப்படி செய்யாதீர்கள். சரி இப்போது மீன் கண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மீன் கண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ;

மீன் சதைப்பகுதியில் இருக்கும் சத்துக்களை போலவே அதன் கண்ணிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதாவது மீன் கண்ணில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மீன் கண்கள் சாப்பிடுவதன் நன்மைகள் :

1. பார்வை கூர்மையாகும்

மீன் கண்கள் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் மீன் கண்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது பார்வைக் கோளாறை நீக்கிவிடும். எனவே கண்பார்வை பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி மீன் கண்கள் சாப்பிட்டுங்கள். உங்களது பார்வை மேம்படும்.

2. மூளைக்கு நல்லது :

சில ஆய்வுகள் படி தினமும் மீனுடன் மீன் கண்ணையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது ஞாபகம் மறதி இனி இருக்கது. உங்களது நினைவாற்றல் மேம்படும். எனவே, உங்களது மூளை ஷார்பாக இருக்க அடிக்கடி மீன் கண்கள் சாப்பிடுங்கள்.

3. சர்க்கரை நோய்க்கு நல்லது

மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைத்து, சர்க்கரை நோயை தடுக்கும். மேலும் நீங்கள் அடிக்கடி மீன் கண்கள் சாப்பிட்டு வந்தால் டைப் 1 நீரிழிவு நோயின் அபாயம் குறையும்.

4. மூட்டு வலி குறையும் :

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மீன் கண்களில் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட அடிக்கடி மீன் கண்களை சாப்பிடுங்கள்.

5. ஆஸ்துமாவிற்கு நல்லது

ஆய்வு ஒன்றில், குழந்தைகளுக்கு மீன் கண்கள் கொடுத்தால் ஆஸ்துமாவின் அபாயம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். ஆனால் பெரியவர்களுக்கு இது எந்தவித பலனையும் தராது.

6. கொலஸ்ட்ராலை குறைக்கும் :

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்

மீன் கண்களில் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால் இது நல்ல தரமான தூக்கத்தை பெற உதவும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதிலும் குறிப்பாக சால்மன் மீன் ரொம்பவே நல்லதாம். ஏனெனில் இதில் பிற மீன்களை விட வைட்டமின் டி அதிகமாகவே உள்ளதாம்.

8. அலர்ஜி குறையும்

ஆய்வு ஒன்றில் மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் உள்ள அலர்ஜியை குறைப்பதாக கண்டறிந்துள்ளன. எனவே உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை ஏதேனும் இருந்தால் மீன்கள் சாப்பிடுங்கள். விரைவில் சரியாகும்.

9. இதயத்திற்கு நல்லது

அடிக்கடி மீன் கண்கள் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயகரமான பிரச்சினைகள் வருவது குறைவு என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளன. எனவே, இதய பிரச்சினைகள் வருவதை தடுக்க மீன் கண்கள் அடிக்கடி சாப்பிடுங்கள்.

10. புற்றுநோய்

அமெரிக்க ஜர்னல் ஆஃப் கிளினிக் அடிப்படையில் மீன்கள் கண்கள் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக கண்டறிந்துள்ளன.

11. இரத்த அழுத்தத்தை குறைக்கும்

உயர் இரத்தம் உள்ளவர்களுக்கு மீன் கண்கள் ரொம்பவே நல்லது. இது இரத்த ஓட்டத்தை பராமரிக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க