காலையில் எலுமிச்சை நீர்! இந்த ரெண்டு பொருள் போட்டு குடித்தால் 7 நன்மைகள்!!

Published : Jun 26, 2025, 09:51 AM IST
lemon turmeric water

சுருக்கம்

தினமும் காலையில் மஞ்சள் இஞ்சி மற்றும் எலுமிச்சை நீர் குடித்து வந்தால் 7 விதமான அற்புத நன்மைகளை பெறலாம். இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.

காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் தான் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் பல நூற்றாண்டுகளாகவே ஒரு கிளாஸ் சூடான நீரில் மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி ஆகியவற்றை கலந்து பானமாக குடித்து வந்தனர். இந்த பானம் புத்துணர்ச்சி தரும். வைட்டமின்கள், ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் போன்றவை உள்ளன. அவை பல உடல்நிலை பிரச்சினைகளை போக்க உதவும். எனவே, தினமும் காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக இந்த ஒரு பானத்தை குடித்து வந்தால் 7 விதமான நன்மைகளை பெறலாம். அவை எண்ணின் என்பது குறித்து இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் :

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் உதவும். அதுமட்டுமு, அதில் குர்குமின், ஆன்டி-பாக்டரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் போன்ற பண்புகளும் உள்ளன. அதுபோல இஞ்சி மற்றும் எலுமிச்சையில் இருக்கும் பண்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இந்த மூன்று கலவையும் சேர்ந்த பானத்தை குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற பருவ தொற்று நோய்கள் வருவது தடுக்கப்படும்.

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும் :

மஞ்சளில் இருக்கும் குர்குமின் மூட்டு வலி, வீக்கத்தை குறைக்க உதவும். அதுபோல இஞ்சியில் இருக்கும் ஆன்ட்டி-இன்ஃபிளமேட்டரி என்னும் பண்புகள் தசை வலியை குறைக்கும். எலுமிச்சையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் செல்களை பாதுகாக்கும். எனவே இந்த மூன்றும் கலந்த பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் மூட்டு வலி, வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

செரிமான செயல்பாட்டை சீராக்கும் ;

இந்த ஆரோக்கிய பானம் ஆனது உங்களது செரிமான செயல்பாட்டை சீராக்க உதவும். அதாவது சூடான நீர் செரிமானத்தை தூண்டும், மஞ்சள் வீக்கத்தை குறைக்கும், இஞ்சி குமட்டலை குறைக்கும், எலுமிச்சை அசிடிட்டியை சமப்படுத்த உதவும். எனவே மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பானம் அருமருந்தாகும்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் :

உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற கல்லீரல் தான் உதவுகிறது. சூடான இந்த பானம் இந்த செயல்பாட்டை இன்னும் சிறப்பாக்குகிறது. எலுமிச்சையானது உடலில் டையூரிக்காக செயல்பட்டு அதிக சிறுநீர் உற்பத்தி செய்து, அதன் மூலம் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதுபோல இஞ்சியும், மஞ்சளும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படும். அதே சமயம் சிறுநீரக செயல்பட்டை ஆதரிக்கும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும் :

தினமும் காலையில் இந்த அற்புதமானதை குடித்து வந்தால் உங்களது சருமம் எப்போதுமே இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். ஏனெனில், எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும். அதுபோல மஞ்சளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் முகப்பருக்கள் வருவது குறையும் மற்றும் சருமத்தின் நிறம் மேம்படும். இஞ்சியில் இருக்கும் ஆன்ட்டி-பாக்டீரியல், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் பண்புகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும்.

எடையை கட்டுக்குள் வைக்க உதவும் :

இந்த பானம் எடையை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி வைக்கும் உணர்வை தரும். இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கலோரிகளை எரிக்க உதவும் மஞ்சள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க உதவும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பானத்தை தயக்கமின்றி தாராளமாக குடிக்கலாம்.

ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் :

மஞ்சள் குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். எலுமிச்சை மற்றும் இஞ்சி ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள்.

இந்த பானத்தை தயாரிப்பது எப்படி?

இந்த பானத்தை தயாரிக்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் மற்றும் சின்ன துண்டு இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பிறகு குடிக்கவும். சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம் .சூடாக இருக்கும் போதே இந்த பானத்தை குடிப்பது தான் நல்லது. இந்த பானத்தை காலை உணவு அதாவது 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன் குடித்து முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?