காலையில் பல் துலக்கும்போது உங்கள் ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கசிவை போக்க வீட்டு வைத்திய குறிப்புகள்..
பெரும்பாலும் ஈறுகளில் இருந்து காலை பல் துலக்கும்போது ரத்தக்கசிவு (Gum Bleeding) ஏற்படுகிறது. சிலருக்கு கடினமான உணவுகளை சாப்பிடும்போது ஏற்படலாம். இதற்கு பல் ஈறுகளின் பலவீனம் ஒரு காரணமாகும். மேலும், பற்களில் வலி, பற்சிதைவு, பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் ஆகிய பல காரணங்களும் உள்ளன. இந்த பிரச்சனை தீவிரமாகும் போது பற்கள் ஈறுகளில் இருந்து நழுவுகின்றன. இதன் காரணமாக ஈறுகளில் வீக்கம் அல்லது ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதனை தடுக்க சில எளிய முறைகள் உள்ளன.
ஆயில் புல்லிங்
undefined
அடிக்கடி ஆயில் புல்லிங் செய்வதால் பற்களில் உள்ள பல பிரச்சனைகள் சரியாகிறது. ஆயில் புல்லிங் செய்வது மிகவும் எளிது. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். அதனை வாயில் நிரப்பி கொஞ்ச நேரம் சுழற்றி பின் கொப்பளித்து துப்பவும். இதன் மூலம் பல்வலி, மஞ்சள் நிறமாதல், ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
உப்பு நீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு கலக்கவும். இந்த தண்ணீரில் வாயை கொப்பளியுங்கள். இது ஈறு வீக்கம் மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிவதைக் குறைக்க உதவுகிறது. உங்கள் பல் வலியிலிருந்து கூட நிவாரணம் அளிக்கிறது. இது மிகவும் எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும்.
இதையும் படிங்க: அடிக்கடி டீ குடிக்கிறீங்களா? அந்த நேரத்துல இந்த 5 உணவுகளை எடுத்துக்காதீங்க! உடம்பு தாங்காது!!
மஞ்சள் பேஸ்ட்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு, வீக்கத்திற்கு உடனடி நிவாரணம் வழங்கும் தன்மை கொண்டது. கொஞ்சம் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்யவும். இந்த பேஸ்ட்டை ஈறுகளில் சுமார் 10 நிமிடங்கள் தடவி வையுங்கள். அதன் பின்னர் வாயை நன்கு கழுவி கொள்ளுங்கள். இது ஈறுகளில் உடனடி நிவாரணம் தரும்.
கற்றாழை ஜெல்
உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு இருந்தால், வீட்டில் உள்ள கற்றாழையில் உள்ள ஜெல்லை ஒரு பாத்திரத்தில் வெட்டி எடுத்து கொள்ளுங்கள். 2 அல்லது மூன்று முறை அதனை கழுவி கொள்ளுங்கள். அதனை ஈறுகளில் நன்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருங்கள். இதற்குப் பிறகு, நீங்கள் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். இது ஈறுகளுக்கு நல்ல பலனை தரும்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் காயம் ஒருபோதும் குணமாகாதா? உண்மை என்ன?