சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் காயம், புண் ஆகியவை ஒருபோதும் குணமாகாது என சொல்லப்படுவது உண்மையா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மரத்து போகும் உணர்வு ஏற்படும். அதனால் தான் அவர்களை எப்போதும் காலணி அணிந்து நடமாட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் சின்ன கல், முள் என்று எது இடறினாலும் அவர்களுக்கு ஏற்படும் காயங்கள் குணமாக வெகுநாட்களாகும் என்பதே அதற்கு முக்கிய காரணம். உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயம் ஆறாதா? இதை ஓரளவு உண்மை என்றுதான் மருத்துவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு ஏற்படும் புண் அல்லது காயம் ஆண்டுகணக்கில் ஆறாமல் அப்படியே இருக்கும். சிலருடைய கட்டை விரலில் உண்டாகும் காயம் ஆண்டுகள் ஆனாலும் ஆறாமலே காணப்படும். ஏனென்றால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருப்பதே அதற்கு காரணம். ஒருவருடைய கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு, அவருக்கு சர்க்கரை வியாதியும் இருக்கும்பட்சத்தில் அதை முறையாக கவனிக்க வேண்டும். அப்படி செய்யாமல் தவறும் போது, அறுவை சிகிச்சையில் அந்த விரலை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும். ரொம்ப மாதங்களாக அதை கவனிக்காமல் விட்டால் காலையே கூட அகற்றும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
undefined
ஆகவே சர்க்கரை நோயாளிகள் எப்போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி கட்டுக்கோப்பாக இருப்பவர்களுக்கு புண்கள் அல்லது காயம் உடலின் எந்த பாகத்தில் வந்தாலும் விரைவில் ஆறும். ஒருவேளை ரத்தத்தின் சர்க்கரை அளவை உங்களால் இயற்கை முறையில் சரி செய்ய முடியாவிட்டால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இன்சுலின் செலுத்தி குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்களுடைய கட்டைவிரல் உள்ளிட்ட உடலின் எந்த பாகத்தில் புண் அல்லது காயம் ஏற்பட்டாலும் விரைவில் ஆறிவிடும்.
இதையும் படிங்க: ஆப்பிள் பழம் கோடை காலத்தில் இவ்வளவு நல்லதா? நாளுக்கு 1 ஆப்பிள் சாப்பிட்டால்.. எந்த கோடை நோயும் வராது!
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் அடுத்த நொடியில் இருந்து, அவர்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாம்பழம் போன்ற பருவ கால பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். முள்ளங்கி, கேரட் ஆகியவற்றைத் தவிர மண்ணுக்கு கீழ் விளையும் எந்த காய்கறிகளையும் உண்ணக்கூடாது. ஒருவேளை அளவாக மட்டுமே சோறு உண்ண வேண்டும். நாள்தோறும் நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு வகைகளை அறவே தொடக் கூடாது. கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு போன்ற கனிகளை உண்ணலாம். அதுவும் அளவாக மட்டுமே. கோடை வெயிலுக்கு இதமாக வெள்ளரி எடுத்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு சாப்பாடு இலவசம்.. இப்படி ஒரு வசதி இருப்பது தெரியுமா?