நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?

Published : Apr 25, 2023, 07:22 PM ISTUpdated : Apr 25, 2023, 07:27 PM IST
நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?

சுருக்கம்

நண்பர்கள் மனம் விரும்பி திருமணம் செய்து கொள்வதால் சில நன்மைகள் கிடைக்கின்றன. 

நண்பர்களுக்குள் நட்பு எப்போதும் நட்பாகவே தான் இருக்க வேண்டும். அது தான் நட்புக்கு செய்யும் மரியாதை என சிலர் சொல்வதுண்டு. மற்றொரு தரப்பினர், யாரையோ அரேஞ்ச்டு மேரேஜ் செய்வதற்கு பதிலாக, தெரிந்த நண்பரை திருமணம் செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லையே என வாதாடுவதும் உண்டு. உண்மையில் நண்பர்களுக்குள் திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா? 

நண்பர்களுக்குள் திருமணம் செய்வதால் ஒருவருடைய ரசனைகளை மற்றொருவர் நன்றாக அறிந்திருப்பார்கள். இதனால் பல நேரங்களில் வீண் சண்டைகளை தவிர்க்கலாம். திருமணம் செய்யும் தம்பதிகளுக்குள் காதலும், காமமும் இருந்தாலும் அங்கு ஒரு நட்பு உரையாடல் தேவைப்படுகிறது. நண்பர்கள் திருமணம் செய்யும்போது அந்த விஷயம் இயல்பாகவே பூர்த்தியாகிவிடும். 

நண்பர்களாக இணைந்தவர்கள் காதலர்களாக, கணவன் மனைவியாக மாறும்போது அவர்களுடைய பிணைப்பு இன்னும் பலப்படுகிறது. ஒருவருடைய லட்சியங்களுக்கு இன்னொருவர் உந்துகோலாக இருக்க பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருப்பதில்லை. அங்கு புரிதல் இருக்கும். 

இதையும் படிங்க: Nude photo: பிரிந்த தம்பதி! நிர்வாண போட்டோக்களால் மீண்டும் இணைந்தார்கள்.. அதுவும் எப்படி தெரியுமா?

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் மணமான பிறகு ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை தொடங்கும் முன்பு, குழந்தை பெற்று கொள்கிறார்கள். ஆனால் நண்பர்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருப்பதால் திருமண வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் இன்பத்தை சுவைக்கிறார்கள். இங்கு பாலின பேதம் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் தயக்கம் இருப்பதில்லை. 'தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ' என்ற உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கும். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இருப்பது போல வரதட்சணை கெடுபிடிகள் இருப்பதில்லை. சாதி, மதம், வர்க்கம் அங்கு பெரிய விஷயமாக கணக்கிடப்படுவதில்லை. 

மற்ற சில நன்மைகள்!! 

  • உங்களுடைய ரகசியங்கள் பாதுகாக்கப்படும். 
  • விரும்பியதை பேசலாம். எந்த தயக்கமும் தேவையில்லை. 
  • உங்களுடைய கருத்துக்களை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சொல்ல முடியும். 
  • நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். யார் முன்பும் நடிக்கத் தேவையே இல்லை.  

இதையும் படிங்க: First night: முதலிரவு அன்று யோசிக்காமல் ஆண்கள் செய்யும் தவறுகள்!! காலம் முழுக்க துரத்துமாம்!!

PREV
click me!

Recommended Stories

Relationship Tips : கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்
Relationship Tips : ஆண்களே! மனைவியோட டார்ச்சர் தாங்கலயா? இந்த 5 விஷயங்களை பண்ற ஆளா நீங்க? செக் பண்ணுங்க!!