எப்போதும் பொய்க்கு மேல் பொய் சொல்லி ஏமாற்றி விட்டு மீண்டும் பழையபடி உறவாட துடிக்கும் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சந்தேகம் கேட்கும் வாசகிக்கு நிபுணரின் பதிலை பாருங்கள்.
ஒவ்வொரு உறவும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நெருக்கத்தை காணுகின்றன. சிலர் சில நேரங்களில் பிரிந்தும் போகின்றனர். அதற்கு உறவின் நேர்மை, அன்பு போன்ற பல விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. இங்கு தன்னை ஏமாற்றி விட்டு இப்போது இணைந்து வாழ நினைக்கும் கணவனை கையாளுவது குறித்து வாசகிக்கு நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
"திருமணமாகி சில மாதங்கள் ஆகின்றன. என்னுடைய கணவர் என்னை ஏமாற்றி வருகிறார் என்பதை அறிந்து கொண்டு ரொம்ப வேதனைப்பட்டேன். அந்த விஷயங்கள் வெளிப்படையாக தெரிந்த பின்னர் வாக்குவாதங்கள் வந்தன. அவர் இப்போது அதையெல்லாம் திருத்தம் செய்ய நினைக்கிறார். நான் அவரை மன்னிக்க வேண்டுமா அல்லது ஏமாற்றியவரை விட்டு விலக வேண்டுமா? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்கிறார் வாசகி.
மன்னிக்க வேண்டுமா?
நிபுணரின் பதில்: "இது இப்போதெல்லாம் பொதுவான நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு எதை ஏற்று கொள்ள முடியும், எதை ஏற்று கொள்ள முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அதற்கான எல்லைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். உறவுகளில் ஏமாற்றுதல் பல மாதிரி நடக்கலாம். அது உணர்வுகள், உடல், டிஜிட்டல் மோசடி என பல வகைகளில் இருக்கும். உங்களுடைய துணை உங்களுக்கு தெரியாமல் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதும் ஏமாற்றுதல் தான். இப்படி உங்கள் துணை நடந்து கொள்வதால் ஏமாற்றத்தின் உச்சத்தை அடைவீர்கள். உங்களுடைய நம்பிக்கை முற்றிலும் உடைந்து விடும். நிறைய உணர்வுரீதியான வலிகளை சந்திக்க நேரிடும்.
மனிதரின் தவறுகள்!
நீங்கள் இப்படி வலிகளை அனுபவிக்கும் சமயத்தில் உங்கள் துணை வருத்தப்பட்டு, உங்களிடமே திரும்பி வந்து இரண்டாவது வாய்ப்பைக் கேட்கலாம். ஒருவேளை அப்போதும் உங்கள் இருவருக்குள் வலுவான உறவு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவரை ஏற்று கொள்ளலாம். தவறுகள் செய்யாமல் புனிதனாக இருக்க நாம் இறைவனில்லையே! உங்கள் கணவர் ஏன் ஏமாற்றினார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க: வயது மூத்த பெண்கள் மீது ஆண்கள் ஏன் மோகம் கொள்கிறார்கள்?
ஒருவேளை உங்கள் உறவில் ஏதேனும் ஒருவகையில் வெற்றிடம் இருந்திருக்கலாம். அந்த வெற்றிடத்தை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மறுபடியும் உங்கள் துணையை நம்புவது அவ்வளவு லேசான காரியம் கிடையாது. அவருக்கு கொஞ்ச நேரம் கொடுங்கள். உங்கள் துணை உண்மையில் தான் தவறு செய்ததால் திருந்த முயற்சி செய்கிறாரா? அல்லது நீங்கள் அவருடைய ஏமாற்று விவகாரத்தைக் குறித்து நீங்கள் அறிந்ததிலிருந்து அதை மறைக்க நாடகமாடுகிறாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய கணவர் நிஜமாகவே நேசித்தால், செய்த தவறுக்காக வருந்தினால் உங்களால் உணர முடியும். பொறுமையாக எல்லாவற்றையும் கவனித்துவிட்டு முடிவு எடுங்கள்.
இணைவதா? பிரிவதா?
உங்கள் துணை தன்னுடைய தவறைத் திருத்த முயற்சி செய்வதை குறித்து நீங்கள் ஆழமாக ஆராய வேண்டும். அது ரொம்ப முக்கியம். ஏனென்றால் மீண்டும் தவறு நிகழாமல் இருக்க இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவர் மீண்டும் உங்களுடன் இணைந்து வாழ மிகவும் மெனக்கெடுகிறார் என்றால், பாசம், அன்பு தவிரவும் அந்த உறவில் என்ன குறை இருக்கிறது? முன்பு உங்களுக்குள் இடைவெளி வரும் அளவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதற்காக இருவரும் நல்ல குடும்ப நல ஆலோசகரை சந்தித்து பேசுங்கள். நிஜமாகவே அந்த ஏமாற்றும் போக்கு முன்பு ஏன் நடந்தது? என்பதை அறிவது அவசியம். மீண்டும் அந்த உறவை தொடங்குவதாக இருந்தாலும், உங்கள் கணவருக்கு வாய்ப்பளிக்க விரும்பாவிட்டாலும் நிபுணரிடம் பேசுங்கள். நலம் வாழுங்கள்!
இதையும் படிங்க: கணவரின் சந்தேக புத்தி.. மகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பெண்! வெளிவந்த உண்மை! ஹாஸ்பிட்டலில் செய்யப்பட்ட சதியா?