கணவரின் சந்தேக புத்தி.. மகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பெண்! வெளிவந்த உண்மை! ஹாஸ்பிட்டலில் செய்யப்பட்ட சதியா?

Published : Apr 14, 2023, 11:41 AM ISTUpdated : Apr 14, 2023, 05:32 PM IST
கணவரின் சந்தேக புத்தி.. மகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பெண்! வெளிவந்த உண்மை! ஹாஸ்பிட்டலில் செய்யப்பட்ட சதியா?

சுருக்கம்

தனது கணவரின் சந்தேகம், திருமண வாழ்க்கையை மொத்தமாக சிதைத்து விட்டது என சமூக வலைதளத்தில் புலம்பிய பெண்... அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவம்

திருமணத்தில் அன்பும் நம்பிக்கையும் மிக முக்கியம். ஆனால் பல சமயங்களில் தம்பதிகளிடையே நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. இதனால் உறவு முறிந்துவிடும். அண்மையில் சமூக வலைதளத்தில் தன் கணவனின் சந்தேகத்தால் திருமண வாழ்க்கை எப்படி சீர்குலைந்தது என்பதை பகிர்ந்துள்ளார். 

தனக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருப்பதாக அந்த பெண் கூறினார். அவருடைய கணவருக்கு, எப்போதும் சந்தேகம் இருந்துள்ளது. இத்தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை அவர் ஒருபோதும் தன் மகளாக கருதவில்லையாம். எப்போதும் சந்தேகம் கொண்டுள்ளார். இதன் காரணமாக சில பரிசோதனைகளை இருவரும் செய்துள்ளனர். ஆனாலும் எப்போதும் மனைவி தன்னை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார் கணவர். இதன் காரணமாக அவர், சில பரிசோதனையை மேற்கொண்டார். ஆனால் முடிவு எதிர்மறையாக வந்துவிட்டது. மகளின் டி.என்.ஏவும் இவருடையதும் ஒத்துபோகவில்லை.  

விவாகரத்து கேட்ட கணவர்

இதையடுத்து கணவர் விவாகரத்து கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண் தான் ஒருபோதும் தன் கணவரை ஏமாற்றவில்லை என்று விடாப்பிடியாக கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் ஒருவருடன் காதலில் இருந்ததாகவும் ஆனால் திருமணம் ஆன பிறகு ஏமாற்றவில்லை என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார் அந்த பெண். இத்தம்பதியினர் கல்லூரியில் இருந்து ஒன்றாக இருந்துள்ளனர். கணவரை அப்போதிருந்தே இவர் விரும்பியுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவரை ஏமாற்ற நினைக்கவே இல்லை என்றும் அந்த பெண் குமுறுகிறார். ஆனால் அந்த மகளுக்கும் தனக்கும் எந்த சோதனை முடிவுகளும் ஒத்து போகவில்லை என்பதால் சந்தேகம் உறுதியாகிவிட்டது என விவாகரத்து கோரியுள்ளார் கணவர். கணவரின் உதாசீனம் காயப்படுத்தவே, மனதிற்குள் குமுறிய அந்த பெண் தானும் சென்று டி.என். ஏ பரிசோதனை செய்துள்ளார். அப்போது தான் இன்னொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

பொருந்தாத டி.என்.ஏ

மகளின் டிஎன்ஏ பெற்றோர் இருவருக்கும் பொருந்தவில்லை என தெரியவந்துள்ளது. "எனக்கும், எனது கணவர் மற்றும் மகள் அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவு வெளியாகி எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் மகளின் டிஎன்ஏ எங்கள் இரண்டு பேருடனும் பொருந்தவில்லை. இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனது மகளை பெற்றெடுத்த மருத்துவமனை மீது வழக்கு தொடரப்போகிறேன்" என்று அந்த பெண் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: வயது மூத்த பெண்கள் மீது ஆண்கள் ஏன் மோகம் கொள்கிறார்கள்?

"என் குழந்தைக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை," என்று வேதனையுடன் அந்த பெண் கூறினார். இத்தனையும் நடந்த பிறகு கணவர் மீண்டும் அவரிடம் திரும்பி சென்றுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண் தன் மகளுடன் மட்டுமே இருக்கிறாராம். யாராவது தன் மகளை பறித்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சந்தேக கணவன் வந்தது கூட இப்போது பொருட்டில்லை. மகளை யாரும் பறித்துவிடுவார்கள் என்பது தான் வருத்தமாக உள்ளது என்கிறார். 

யார் தவறு? 

"அந்தச் சோதனையை நாங்கள் செய்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். எனது உண்மையான மகள் எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும், என்னுடன் வசிக்கும் மகளை யாரும் பறித்துச் செல்லக் கூடாது எனவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று அந்த பெண் கூறியுள்ளார். எந்த முன்முடிவும் இல்லாமல் நம்பும்போது மட்டும்தான் நாம் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். சந்தேகம் எல்லார் வாழ்விலும் நெருப்பை கக்கிவிட்டு தான் செல்கிறது. 

இதையும் படிங்க: செக்ஸ் உறவுக்கு முன்னும், பின்னும் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாதாம்!!

PREV
click me!

Recommended Stories

Relationship Tips : கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்
Relationship Tips : ஆண்களே! மனைவியோட டார்ச்சர் தாங்கலயா? இந்த 5 விஷயங்களை பண்ற ஆளா நீங்க? செக் பண்ணுங்க!!