சாணக்கியர் தன்னுடைய நீதி சாஸ்திரத்தில் நிதி, தோழமை, திருமண பந்தம், செல்வம் உள்ளிட்ட வாழ்வியல் சம்பந்தமான பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.
சாணக்கிய நீதி ஆண் பெண் இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குணாதிசயங்களை குறித்து சொல்கிறது. அதில் தொழில், நிதி உள்ளிட்ட பல விஷயங்களும் கூட சொல்லப்பட்டிருக்கும். பழமையான இந்த நூல் இந்த காலகட்டத்திலும் பொருந்திபோகிறது. சாணக்கியர் ஆண்க்ளை விட பெண்க சில விஷயங்களில் உயர்ந்தவர்கள் என்கிறார். ஏன் அவ்வாறு சொல்கிறார் என்ற பின்னணியை இங்கு காணலாம்.
பசித்த வயிறு!
ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக பசி உணர்வை கொண்டிருப்பார்கள் என ஆச்சார்யா சாணக்கியர் சொல்கிறார். உணவு விஷயத்தில் பெண்கள் முன்னிலையில் இருக்கின்றனர். சாணக்கியரின் கொள்கைகள் கூறுவது என்னவென்றால், பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம் பசியோடு இருப்பார்களாம். பெண்களுடைய உடல் அமைப்பு தான் இதற்கு காரணம். அதனால் தான் பெண்களை நன்றாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
அறிவுக்கூர்மை
ஆண்களைக் காட்டிலும், பெண்கள் உயர்ந்தவர்களாக இருப்பதற்கு இரண்டாவது காரணம் அவர்களுடைய அறிவுக்கூர்மை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் புத்திசாலிகள். கடினமான சூழலில் கூட பெண்களுடைய புத்திசாலித்தனம் அவர்களை தப்பிக்க வைக்கிறது.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் இப்படி செய்தால்... அவர் மோசமான கணவரா தான் இருப்பார்!
தைரியம்
ஆண்கள் தான் தைரியமானவர்களாக தெரிகிறார்கள். ஆனால் சாணக்கிய நீதியின் படி பெண்கள் ஆண்களை காட்டிலும் ஆறு மடங்கு தைரியம் அதிகமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் கூட பயப்படாத குணம் பெண்களுடையது என சாணக்கியர் கூறுகிறார். மன அழுத்தம், சகிப்புத்தன்மை ஆகியற்றை வைத்து பார்த்தால் பெண்கள் எப்போதும் ஆண்களை விட உயர்ந்தர்களாக தைரியமானவர்களாக இருக்கின்றர்.
பாலியல் இச்சை
பெண்களுடைய பாலுணர்வு ஆண்களை காட்டிலும் அதிகம். ஆண்களை ஒப்பிட்டால் பெண்கள் தான் அதிகமான சிற்றின்ப உணர்வு உடையவர்கள் என சாணக்கிய நீதி சொல்கிறது. ஆண்களை காட்டிலும் பெண்கள் 8 மடங்கு பாலுணர்வுகளை கொண்டிருப்பார்களாம். இதன் காரணமாக, ஆண்களுக்கு பாலியல் சார்ந்த உணர்வுகளை குறைவாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மாறாக பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் அதிகமான பாலியல் ஆசைகள் இருப்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
இதையும் படிங்க: ஒன்பது மனைவிகள்... இப்போ முதல் குழந்தையை பெற போகும் மனைவி யார் என்ற போட்டி! புத்திசாலி கணவனின் அதிரடி முடிவு