கிரீன் டீ மற்றும் புரோட்டீன் ஷேக் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ள பொருட்களாக பலராலும் கருதப்படுகிறது. இவற்றை குடிப்பவர் ஆற்றலுடன் இருப்பார்கள் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவர். ஆனால் இவை இரண்டில் எது ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் கிரீன் டீ அல்லது புரோட்டீன் ஷேக்கை, தங்களுடைய வொர்க்-அவுட்டுக்கு முன்னும் பின்னும் பருகுகின்றனர். கிரீன் டீ மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் நன்மைகள் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் இவ்விரண்டில், எடை இழப்புக்கு சிறந்தது எது? என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது. இவை இரண்டில் எதை நாம் அன்றாடம் குடித்துவந்தாலும், உடற்பயிற்சிக்குப் பிறகு நாம் குடிப்பது நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கு மட்டுமே. பல உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்கள் கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு புரோட்டீன் ஷேக்குகளைத் தேர்வு செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வேறுபலர் க்ரீன் டீ தேர்வு செய்கின்றனர். இதனுடைய ஆரோக்கிய நன்மைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருந்தாலும், புரோட்டீன் ஷேக் அல்லது கிரீன் டீ எது சிறந்தது? என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
இதில் கலோரிகள் குறைவு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். பலரும் எடை இழப்புக்கு இதை பருகிவருகின்றனர். அதன்மூலம் கைமேல் பலன் கிடைப்பதாகவும், அவர்கள் கூறுகின்றனர். அதனால் உடை எடையை குறைக்க விரும்புவோர் விரும்பும் பானமாக பல ஆண்டுகளுக்கு முன்னரே க்ரீன் டீ உருவெடுத்துவிட்டது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவதால், கூடுதலாக உடலில் சேரும் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதிலிருக்கும் இ.ஜி.சி.ஜி என்கிற பொருள், நோய்களைத் தடுக்க உதவுகிறது.
உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பு அதிகரிக்க்கும். இது இயல்பான ஒன்று தான். அப்போது க்ரீன் டீயை குடிப்பது உடலுக்கு நிதானமான விளைவை ஏற்படுத்துகிறது. நீங்கள் அந்த டீயை குடிக்க குடிக்க, நுகர்ந்துப் பார்த்தால் இதயத் துடிப்பு கட்டுக்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது மற்றும் தசை வலி மற்றும் சோர்வை சமாளிக்கவும் உதவும். உடற்பயிற்சி செய்வதால் ஆற்றல் குறையும், ஆனால் க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை விரும்புவோர், சக்கரை இல்லாத பானம் என்பதால் அவர்கள் க்ரீன் டீயை தேர்வு செய்கின்றனர்.
நகங்களைச் சுற்றி இறந்த செல்கள் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள் இதுதான்..!!
புரோடீன் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் நன்மை, அதை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தையில் கிடைக்கும் இந்த ஷேக்குகளை எளிதாக தயாரித்துவிடலாம். அதனாலேயே ஃபிட்னஸ் ப்ரியர்கள் பலர் இதை விரும்பி அருந்தி வருகின்றனர். உடற்பயிற்சிக்குப் பின் உட்கொள்ளும் போது அவை உங்கள் உடலுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். புரோட்டீன் என்பது உடல் வளர்ச்சிக்கு அவசியமான சத்தாகும். அதேபோன்று புரத அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க புரோட்டீன் ஷேக்குகள் ஒரு சிறந்த வழி.
உடற்பயிற்சிக்குப் பிறகு புரதம் உட்கொள்வதற்கான பொதுவான காரணம், தசை மீட்சியை விரைவுபடுத்துவதே ஆகும். அவை தசைகளை உருவாக்க மற்றும் சரிசெய்ய உங்கள் உடலை எரிபொருளாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், கொழுப்பை விரைவாக எரிக்கவும் உதவுகிறது. புரோட்டீன் ஷேக்குகள் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்தை அளிக்கின்றன. மற்ற பொருட்கள் மூலம் உடலுக்கு தேவையான புரத அளவை பெறுவதற்கு
அதிக நேரம் தேவைப்படலாம். ஆனால் புரோட்டீன் ஷேக்குகள் சாப்பிடுவதன் மூலம், அது எளிதாக உங்களுக்கு கிடைத்துவிடும்
எடை இழப்புக்கு சிறந்து எது? க்ரீன் டீ அல்லது புரோட்டீ ஷேக்?
இந்த இரண்டு பானங்களும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் மற்றும் உங்கள் பசியைக் குறைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது ஜிம்மில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் வகையைப் பொறுத்தது. கடுமையான உடற்பயிற்சிகள், தீவிர பயிற்சி அல்லது பளு தூக்குதல் போன்றவற்றின் போது, புரோட்டீன் ஷேக்குகள் நல்லது. டிரெட்மில் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளுக்காக நீங்கள் ஜிம்மில் இருந்தால், க்ரீன் டீ நல்லது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.