பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைக்கும் கட்டுப்படாத வாய் புண்- என்ன செய்யலாம்?

By Dinesh TGFirst Published Oct 3, 2022, 6:05 PM IST
Highlights

கோடைக் காலங்களில் உட்கார்ந்தே இருப்பவர்கள், சூடான உணவுகளை சாப்பிடுபவர்கள், அதிக தண்ணீர் குடிக்காதவர்கள் உள்ளிட்டோருக்கு வாயில் அடிக்கடி புண் வருவதுண்டு. ஆனால் ஒரு சிலருக்கு மாதத்துக்கு 2 முறை அல்லது வாரம் ஒருமுறை வாய்ப்புள் வருகிறது. அப்போது பல மருத்துவர்கள் அவர்களுக்கு பி -காம்பளக்ஸ் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர்.
 

கோடைக் காலங்களில் உட்கார்ந்தே இருப்பவர்கள், சூடான உணவுகளை சாப்பிடுபவர்கள், அதிக தண்ணீர் குடிக்காதவர்கள் உள்ளிட்டோருக்கு வாயில் அடிக்கடி புண் வருவதுண்டு. ஆனால் ஒரு சிலருக்கு மாதத்துக்கு 2 முறை அல்லது வாரம் ஒருமுறை வாய்ப்புள் வருகிறது. அப்போது பல மருத்துவர்கள் அவர்களுக்கு பி -காம்பளக்ஸ் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பிட்ட மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டும் வாய் புண் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனால் குறிப்பிட்ட பாதிப்புகளை கொண்டவர்கள் உடனடியாக மருத்துவரை நாடுவது நன்மை செய்யும். அடிக்கடி வாய் புண் ஏற்படும் பாதிப்பை ஆப்தஸ் அல்சர் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. வாயில் சுகாதாரப் பாதிப்பு, ஒழுங்காக பல் தேய்க்காதவர்கள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாதபோது வாய் புண் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

உடலில் பசி அதிகமாக எடுப்பது போன்று உணர்வு ஏற்பட 5 காரணங்கள்..!!

இதுதவிர 2 முக்கிய காரணங்கள் உள்ளன. சிலர் பிரெஷ் செய்யும் முறையில் புண் ஏற்படலாம் மற்றும் பல் வரிசை காரணமாகவும் ஒரு சிலருக்கு அடிக்கடி வாயில் புண் ஏற்பட்டவாறு இருக்கும். மனிதர்களுக்கு வாய் மிகவும் முக்கியமான உறுப்பு. அதை வைத்துக் கொண்டு தான் நம்முடைய அன்றாட பிழைப்பு இயங்கி வருகிறது. அதிகளவில் சாப்பிடுவது பேசுவது காரணமாக பற்களில் உராய்வு ஏற்ப்ட்ட் புண் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

அதுமட்டுமில்லாமல் ஊட்டச்சத்து குறைபாடும் வாய்ப்புண் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. உடலில் வைட்டமின் ஏ , பி மர்றும் சி போன்ற சத்துக் குறைபாடு கொண்டவர்களுக்கு வாயில் அடிக்கடி புண் ஏற்படும். அதனால் இதுபோன்ற அடிக்கடி வாய் புண் பிரச்னையால் பாதிக்கப்படக் கூடியவர்கள் முதலில் வாயின் சுகாதாரத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

முத்தம் தருவதிலும் பெறுவதிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?? இது தெரியாம போச்சே..!!

அது சரியாக இருக்கும் பட்சத்தில் ஊட்டச்சத்து நிபுணரை தேடிச் சென்று, அவரிடம் சிகிச்சை மேற்கொள்ளுங்கள். அவர் ஏதேனும் பரிசோதனை செய்யும் பட்சத்தில், உங்களுடைய வாய் புண் பிரச்னை குறித்து தெரியவரும். அதையடுத்து அவர் வழங்கும் சிகிச்சைகளை முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில், இந்த பாதிப்பு சரியாகும்.

மருத்துவமனை செல்லும் முன்பு, உணவுப் பழக்கம் மூலமாகவும் இதை கட்டுப்படுத்தலாம். அதற்கு தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆப்பிள், கொய்யா, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, டிராகன் ஃப்ரூட் போன்றவை இதற்கு சரியான பழங்களாகும். மேலும் காலையும் இரவும் பல் துலக்குவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். இந்த பாதிப்புக்கு வாய் சுத்தம் பேணுவது முக்கியம்.

ஒருசிலருக்கு ஆட்டோஇம்யூன் பிரச்னை காரணமாகவும் வாயில் புண் வரலாம். அதற்கு நிச்சயம் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு வாயில் மட்டுமில்லாமல் வயிறு, வாய், ஆசனவாய் என எல்லா இடங்களிலும் அடிக்கடி பாதிப்பு வரும். இது அரிதான பிரச்னை என்றாலும், மருத்துவரிடம் உரிய சிகிச்சை செய்துகொள்வது நல்லது. மது, புகை மற்றும் சோடா குடிக்கும் பழக்கங்களையும் தவிர்ப்பது, பிரச்னையில் இருந்து விரைவில் குணமடைய உதவும்.

click me!