உடல் எடையை குறைக்க விரும்புவோர் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை அதிக அளவில் எடுத்து கொண்டால், நமக்கு ஏற்படும் சத்து குறைப்பாட்டை இந்த விதை கொண்டு சமன்செய்து விடலாம். கிட்டத்தட்ட 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதால், 600 கலோரிகளை பெற முடியும். பூசணி விதைகளின் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.
காய்கறிகள் பலவும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். அவ்வகையில், வித்தியாசமான சுவை கொண்ட காய்கறி தான் மஞ்சள் பூசணி. சாம்பாரில் எந்த வகை காய் சேர்த்தாலும், மஞ்சள் பூசணியை குறைந்தபட்சம் ஒரு கீற்றாவது சேர்த்து சமைத்தால், அதனுள் இருக்கும் இனிப்பு சுவை சாம்பாரின் சுவையை அற்புதமாக மாற்றும். பூசணியை பொரியல் மற்றும் குழம்பிறகு பயன்படுத்தி விட்டு அதன் விதைகளை நாம் தூக்கி ஏறிவோம். ஆனால் மஞ்சள் பூசணி விதைகளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டால், அதனையும் இனி விட்டு வைக்க மாட்டோம். இதன் விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ என பல வகையான சத்துகள் அடங்கியுள்ளன.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை அதிக அளவில் எடுத்து கொண்டால், நமக்கு ஏற்படும் சத்து குறைப்பாட்டை இந்த விதை கொண்டு சமன்செய்து விடலாம். கிட்டத்தட்ட 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதால், 600 கலோரிகளை பெற முடியும். பூசணி விதைகளின் நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.
ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுதானியங்கள் நமக்கு அவசியம் தேவை!
பூசணி விதைகளின் பயன்கள்
பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் ஒட்டுமொத்த விந்தணு தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடற்செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்குகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இது நம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் நலனைப் பாதுகாக்கிறது. மேலும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப் படுத்தும்.
மீன்களில் அதிகம் இருக்கும் ஒமேகா-3 அமிலம், பூசணி விதைகளிலும் அதிகளவில் உள்ளது. இவை இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதால், சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பூசணி விதையில் உள்ள டிரைடோபன் எனும் வேதிப்பொருள், உறக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல உறக்கத்தை வரவழைக்க உதவும். மேலும் பூசணிக்காய் விதைகளில் மக்னீசியம் இருப்பதால், அது இன்சோம்னியா போன்ற உறக்கமின்மை நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!
பூசணி விதைகளில் உள்ள மக்னீசியச் சத்துகள் இரத்த அழுத்ததை குறைப்பதால், இதய ஆரோக்கியத்தை நல்லது. ஒரு கப் அளவு பூசணி விதையை சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான மக்னீசியம் சத்து கிடைத்து விடும். பூசணிக்காய் விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். சமைக்கும் உணவுப் பொருட்களில் கலந்தும் சாப்பிடலாம். பூசணி விதைகளை தினசரி ஸ்நாக்சாகவும், சிற்றுண்டி உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.