ஆட்டிப்படைக்கும் சோம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுறுசுறுப்புடன் இருக்க ஐந்து டிப்ஸ்…

Asianet News Tamil  
Published : Oct 02, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
ஆட்டிப்படைக்கும் சோம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுறுசுறுப்புடன் இருக்க ஐந்து டிப்ஸ்…

சுருக்கம்

Five tips to be busy with ending laziness ...

சோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியாது. சோர்வு, உடலையும், மனதையும் மந்த கதிக்கு மாற்றிவிடும். எளிதான வேலையை கூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் தடுமாற வைத்துவிடும். சோர்வில் இருந்து மீள உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

1.. காலையில் எழும்போதே பெரும்பாலானோரை சோர்வு தொற்றிக் கொள்ளும். அப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுத்து சோர்வை விரட்டும். நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும்.

2.. இரவில் சரியாக தூங்காததே சோர்வு ஏற்பட காரணமாக இருக்கும். அதன் தாக்கமாக உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே இரவில் ஆழ்ந்து தூங்குவது அவசியம். அது உடல் சோர்வை போக்கும்.

3.. நாள் முழுவதும் உடல் சோர்வின்றி செயல்பட போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் உடல் இயக்கம் சீராக இருக்கும். உடலினுள் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும் உடல் இயக்கம் குறைந்துவிடும்.

4.. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதும் சோர்வை போக்கும். அதிலும் காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும். அதுதான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும். எந்தவேலையிலும் கவனத்தை பதிக்க முடியாமல் செய்துவிடும்.

5.. மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, அவ்வப்போது சத்தான உணவு பதார்த்தங்களை சாப்பிட்டும் வரலாம். அதுவும் உடல் சோர்வை தடுத்து சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.

PREV
click me!

Recommended Stories

மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks