ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் எண்ணெய் ஒரு நல்ல மருந்து. எப்படி?

 
Published : Mar 29, 2018, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீன் எண்ணெய் ஒரு நல்ல மருந்து. எப்படி?

சுருக்கம்

Fish oil is a good medicine for those suffering from asthma. How?

மீன் எண்ணெய்

** மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

** மீன் எண்ணெயில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன.

** நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா பேட்டி ஆசிட், அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும் என்பதால் இதய நோயாளிகள் இதனை சாப்பிடலாம்.

** இதில் உள்ள EPA எனும் நோய் எதிர்ப்பு பொருள், மன நிம்மதி அளித்து மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

** இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

** கால்சியம் குறைபாட்டால் மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தால், இதனை சாப்பிடுவதன் மூலம், எலும்பு வலுவடையும், மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

** சருமம் நன்கு மென்மையாகவும், கூந்தலும் நன்றாக வளரும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

** இந்த எண்ணெயில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
 

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்