இந்தெந்த உடல் பிரச்சனைகளை தீர்க்க இதெல்லாம்தான் எளிய தீர்வுகள்...

First Published Mar 29, 2018, 12:30 PM IST
Highlights
These are simple solutions to solve these physical problems ...


நாம் உணவாக நினைத்து சாப்பிடும் பல பொருட்களில் இருக்கும் மருத்துவ தன்மை நமக்கு தெரிவதில்லை. அப்படி நம் அருகிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து எந்தெந்த உடல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பார்க்கலாம்.

** மூக்கடைப்பு

மூக்கடைப்பு அதிகம் இருக்கும் நேரத்தில் கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம், ஏலக்காய் விதை இவை அனைத்தையும் நன்றாக அரைத்து பொடி செய்து மூக்கில் முகர வேண்டும். இதை செய்தால் நன்றாக தும்மல் வரும். தும்மல் வந்தவுடன் சில நிமிடங்களில் மூக்கடைப்பு தொல்லையும் அகலும்.

** தொண்டை வலி

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் உப்பு இவை எல்லாவற்றையும் ஆறிய நீரில் கலந்து 2 அல்லது மூன்று நாட்களுக்கு வாய் கொப்பளித்தால் தொண்டை வலி சரியாகும்.

** வாய்ப்புண்

வாய்புண்ணானது உதட்டின் உள்பக்கம் வெள்ளை நிறமாக வரும். இதை சரி செய்ய கல் உப்பை தண்ணீரில் போட்டு உணவு சாப்பிட்ட பின் வாயில் வைத்து துப்ப வேண்டும்.

** பித்தக்கற்களை நீக்க

பித்தப்பையில் உருவாகும் இந்த பித்தக்கற்களை நீக்க எலுமிச்சை, மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து குடித்தால் நாளடைவில் இது சரியாகும்.

** உடல் எடை குறைய

தினமும் காலை வெறும் வயிற்றில் கால் ஸ்பூன் மிளகுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவையை கலந்து குடித்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.

** பல் வலி

மிளகையும், கிராம்பு எண்ணெய்யையும் சேர்த்து வலிக்கும் பற்களின் மீது தடவ வேண்டும். இந்த பல்வலி சமயங்களில் இரு முறை பல் துலக்கவும், இனிப்பான உணவுகளை தவிர்க்கவும் வேண்டியது அவசியமாகும்.

** மூக்கில் வடியும் இரத்தம் நிற்க

மூக்கில் இரத்தம் வந்தால் உடனடியாக ஒரு பஞ்சுருண்டையை எலுமிச்சை சாரில் ஊற வைத்து இரத்தம் வரும் இடத்தில் வைக்க வேண்டும். இதை செய்யும் போது தலையை சிறிது குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இரத்தம் தொண்டைக்கு போகும் அபாயம் உள்ளது.
 

click me!