இவ்வளவு பயன்கள் தரும் மருதாணியை ஆண்கள் கூட பயன்படுத்தலாம்...

First Published Mar 29, 2018, 12:32 PM IST
Highlights
Men can also use henna that gives so much benefits ...


மருதாணியில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள்

மருதாணி கைகளுக்கு வெறும் அழகையும், நிறத்தையும் மட்டும் தராமல் மருத்துவக் குணங்களுக்கும் பயன்படும்.

பயன்கள்

** மருதாணி வைப்பதால் உடல்சூடு குறையும். நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து நகச்சுத்து வருவது தடுக்கப்படுகிறது.

** அடிக்கடி மருதாணி இடுவதால் மனநோய் ஏற்படுவது குறையும். நாள்பட்ட புண்களை ஆற்றும்.

** மருதாணியின் பொடியினை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் தலைக்கு தேய்த்து வர முடி நன்கு வளரும், இளநரையினைப் போக்கும்.

** உள்ளங்காலில் வரும் ஆணிக்கு வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்துக் தொடர்ந்து ஆணி உள்ள இடத்தில் கட்டினால் ஒரு வாரத்தில் சரியாகும்.

** மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும் என அகத்தியர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலை புகைப்போடுவதால் துஷ்டத்தேவதைகள் விலகும்.

** மருதாணியின் பூவினை துணியில் கட்டி தூங்கும் போது தலைக்கு மேல் வைத்தால் தூக்கமின்மைப் பிரச்சனைகள் தீரும்.

** இலைகளின் வடிசாறு அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.

** கால் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

** சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

** கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக போடலாம்.
 

click me!