தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க அத்திப்பழத்தை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாகவே, நாம் எல்லோரும் ஆசைப்படுவது ஒன்று ஸ்லிம் & பிட் ஆக இருக்க வேண்டும் என்று. ஆனால் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை பழக்க வழக்கங்களால் பலர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, வயிற்றில் அதிக கொழுப்பு இருப்பதால் தொப்பை காணப்படுகிறது. மேலும் உடல் பருமனால் பலரது கேலியால் மன அழுத்தம் தான் உண்டானது. பலர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக தங்களுக்கு பிடித்தமான உணவு சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமின்றி ஜிம்முக்கு சென்று அதிக பயிற்சி எடுப்பார். இருந்தபோதிலும் உடல் எடை குறைந்த பாடில்லை.
எவ்வளவுதான் முயற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு என்ன ஒரு சக்தி வாய்ந்த நீர் உள்ளது. அதுதான் அத்திப்பழம் நீர். இந்த நீரே நீங்கள் தினமும் குடித்து வந்தால் ஒரு சில மாதத்திலேயே உங்கள் தொப்பை குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த வகையில் அத்திப்பழ நீர் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்..
undefined
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்: அத்திப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பொதுவாகவே, வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் உடல் எடையும் குறையும் தெரியுமா? மேலும் வளர்ச்சியை மாற்றம் அதிகமாக இருக்கும் போது உணவு விரைவில் ஆற்றலாக மாறும். இதனால் கலோரிகள் வேகமாக எரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது.
பசியைத் தூண்டாது:
நீங்கள் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். நார்ச்சத்து பசி உணர்வை தூண்டாது. வயிறு நிரம்பி இருப்பது போல் உணர்வை கொடுக்கும். சொல்லபோனால் பசி எடுக்காது. இதனால் கலோரியை அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம். இவை உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. அதுபோல் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் அத்திப்பழ நீரை குடிக்கலாம்.
இதையும் படிங்க: அத்திப் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்து குணங்கள் ஒரு அலசல்…
செரிமானத்தை மேம்படுத்தும்: அத்திப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இப்பழத்தின் நீரை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. குறிப்பாக, கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுக்கிறது.
இதையும் படிங்க: அத்திப்பழம் ஆரோக்கிய நன்மைகள்- அறிந்ததும்..!! அறியாததும்..!!
இந்நிலையில், நீங்கள் உடல் எடையை குறைக்க அத்திப்பழ நீரை குடித்து நல்ல விளைவுகளை சந்தித்தாலும், ஒழுங்கான வாழ்க்கை முறை உடற்பயிற்சி ஆரோக்கியம் போதுமான தூக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.