உங்கள் குழந்தைக்கு பால் பவுடர் வாங்குறீங்களா? அப்ப கண்டிப்பா இவற்றை தெரிஞ்சுக்கோங்க..!!

By Kalai Selvi  |  First Published Sep 26, 2023, 7:37 PM IST

நீங்கள் உங்கள் குழந்தைக்கு பால் பவுடர் வாங்கும் போது இவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..


பொதுவாகவே வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கொடுப்பது அவசியம். அதிலும் குறிப்பாக பிறந்த குழந்தைக்கு மிகவும் அவசியம். மேலும் ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை கண்டிபாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றன. இருந்த போதிலும் சில தாய்மார்களுக்கு பால் கொடுக்க முடியாமல் நிலையில் அவர்கள் பால் பவுடர்களை அச்சமயத்தில் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தவகையில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பால் பவுடர் தரமானதா? மேலும் அவை குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள். எனவே, சரியான பால் பவுடர் வாங்குவதற்கான சில எளிய வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பால் பவுடரை சரியான முறையில் தேர்ந்தெடுப்பதற்கான வழிகள்:

Tap to resize

Latest Videos

ஊட்டச்சத்து உள்ளடக்கம் முக்கியம்:
நீங்கள் ஒரு பால் பவுடரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது அதில், கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?

ஆர்கானிக் பொருட்கள்:
பொதுவாகவே, ஆர்கானிக் பொருட்கள் அடங்கிய பால் பவுடர் குழந்தைகளுக்கு எப்போதும் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது. மேலும் செயற்கை ராசயனங்கள் அல்லது இனிப்பு பொருட்கள் அடங்கிய பால் பவுடர் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவை அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க:  இளம் தாய்மார்களே... குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான 5 விஷயங்கள்..! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!

உணவுத் தேவையை நிறைவு செய்ய கூடியது:
நீங்கள் வாங்கும் பால் பவுடர் உங்கள் குழந்தையின் பசியை நிறைவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு லாக்டோஸ், சோயா போன்றவை அழற்சி ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏற்ற பால் பவுடரை பார்த்து வாங்குவது நல்லது.

சுவை முக்கியம்:
நீங்கள் வாங்கும் பால் பவுடரின் வாசனை மற்றும் சுவை உங்கள் குழந்தைக்கு பிடித்ததாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு சாக்லேட் அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவை பிடிக்கும். இன்னும் சிலருக்கோ மென்மையான கலவை தான் பிடிக்கும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தை விரும்பும் சுவையில் வாங்குவது நல்லது.

பிராண்ட்: 
நீங்கள் பால் பவுடர் வாங்கும் முன் அவற்றின் பிராண்ட் பெயரை பார்ப்பது வாங்குவது நல்லது. சொல்ல போனால் நல்ல பெயர் கொண்ட பிராண்ட் பால் பவுடரை வாங்குங்கள். மேலும் நீங்கள் வாங்கும் பிராண்ட் பால் பவுடர்  பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தி வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா என்பதை அறிந்த பின்னரே வாங்குவது நல்லது.

குழந்தையின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம் என்பதால் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சரியான பால் பவுடரை உங்கள் குழந்தைக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

click me!