இந்த குறிப்பிட்ட வயதில் முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் அற்புதம்..!!

By Dinesh TG  |  First Published Dec 6, 2022, 11:00 AM IST

அனைத்து வயதினரும் முட்டையை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் வலிமை பெறும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
 


அதிக சத்துக்கள் கொண்ட உணவுப் பொருட்களுக்கான பட்டியலில் முதன்மையான இடத்தில் முட்டை உள்ளது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள முழுமையான உணவாகும். இதை உட்கொள்ளும் போது, பல வழிகளிலும் நமது உடலுக்கு நன்மைகள் வந்து சேர்கின்றன. பலர் காலை உணவில் ரொட்டியுடன் முட்டையை சாப்பிட விரும்புகிறார்கள். ஏனெனில் முட்டைகளை மிக வேகமாக சமைக்க முடியும். தினமும் ஜிம்முக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முட்டை சாப்பிடுவார்கள்.

அதில் ஒருசிலர் விதிவிலக்காக வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடுவார்கள். மஞ்சள் கரு எடையை அதிகரிக்கும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் தினமும் ஒரு முழு முட்டை சாப்பிட்டால் கொஞ்சம் கூட எடை கூடாது. உண்மையில் எல்லா வயதினரும் முட்டையை உண்ணலாம். முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் தான் கிடைக்கின்றன.

Latest Videos

undefined

பல சுகாதார நிபுணர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முட்டை சாப்பிட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகின்றனர். குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு அடிக்கடி தசை வலி ஏற்படும், உடல் பலவீனமடையும். அப்போது முட்டை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைத்துவிடுகிறது. மேலும் உடலின் செயல்பாட்டுக்கு வேண்டிய புரதமும் முட்டையில் அடங்கியுள்ளது. இதுதவிர, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போதுமான அளவில் முட்டை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது. 

ஆரோக்கியம் நிறைந்திருக்கும் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாதவர்கள் இவர்கள் தான்..!!

வேகவைத்த முட்டை உடலுக்கு 6.3 கிராம் புரதத்தை வழங்குகிறது. இதன்மூலம் 77 கலோரிகள், 212 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 0.6 கிராம் கார்போஹைட்ரேட், 5.3 ஆரோக்கியமான கொழுப்புகளுடன் வைட்டமின் ஏ, செலினியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி5, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ். போன்றவை கிடைக்கிறது. அதனால் முட்டையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நடுத்தர வயதினருக்கு வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கால்சியம் கிடைக்கவில்லை என்றால், உடல் பலவீனமடைந்துவிடும். எந்த வேலையும் செய்ய முடியாது. அதனால் 40 வயது நிரம்பியவர்கள் கண்டிப்பாக முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வாரத்திற்கு குறைந்தது 7 முட்டைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இது தசைகளை வலுவாக்கும். உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!