உடலில் நீர் எடையை குறைக்க பயனுள்ள வழிமுறைகள்- இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 14, 2022, 7:37 PM IST
Highlights

நமது உடலில் சரியான அளவு தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். அதை முறையாக பராமரிப்பது குறித்து நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். அதற்கான வழிமுறைகள் இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
 

நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், உங்களிடம் பலரும் தண்ணீரை அதிக குடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருப்பார்கள். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, பத்திய உணவு மற்றும் நடைப் பயிற்சி போன்ற வழிமுறைகள் இருக்கும் போது, எதற்காக அதிகம் தண்ணீர் குடிக்கச் சொல்லி அறிவுரை வழங்குகிறார்கள் என்கிற கேள்வி உங்களில் பலருக்கும் எழுந்திருக்கும். 

ஒரு மனித உடலில் சராசரியாக 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஒருநாளின் உடல் எடையில் 1 முதல் 2 கிலோ வரை மாறுபடும். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் மற்றும் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் எவ்வளவு தண்ணீரை இழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். அதனால் நீங்கள் உடல் எடை குறைப்புக்கான பயணத்தில் இருக்கும் போது, தண்ணீர் குடிக்கும் அளவு மிகவும் முக்கியமாகும். 

குறிப்பாக குறைந்த நீர் உணவு மற்றும் அதிக சோடியத்துடன் இணைந்தால் இதய நோய், சிறுநீரகம், மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் உங்களுடைய முயற்சி தடைபடலாம். வேறுசில உடல்நலப் பிரச்னைகள் தோன்றலாம். அதனால் உடலில் சரியான அளவின் தண்ணீர் சத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். அதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

தூங்கும் போது தொண்டை வறண்டு போகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..!!

கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் அதிகப்படியான சோடியம் காரணமாக உடலில் நீர் அதிகளவில் தங்கிவிடலாம். மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடு நீர் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். பெண்களில் இயற்கையான ஹார்மோன் மாற்றங்கள் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர் தக்கவைப்பை அதிகரிக்கலாம். உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது உடலில் நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நிற்பது போன்றவை, நம் உடல் முழுவதும் திரவங்கள் சரியான சுழற்சியில் செயல்படுவதை தடுக்கக்கூடும். இது உங்கள் உடல் திசுக்களைச் சுற்றி நீர் தேங்க வழிவகுக்கும். இதன் விளைவாக கால் மற்றும் கைகள் போன்ற உடலின் முனைகளில் வீக்கம் ஏற்படும். நமது இதயம் அல்லது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சினைகள் ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இந்த இடையூறுகளால் திரவம் உருவாகி, அது உடலுக்கு கூடுதல் நீர் எடையை கொடுத்துவிடும். 

மருந்துகள் நம் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன்காரணமாக உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். கருத்தடை மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதற்கு சரியான உதாரணமாகும். எந்தவொரு மருந்தும் தொந்தரவு தரக்கூடிய பக்கவிளைவுகளை உருவாக்கினால், ஒரு நபர் தனது மருத்துவரை அணுக வேண்டும்.

உடலில் திரவம் சேராமல் தடுக்கப்பட வேண்டுமானால், அதிகளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 2,000 கலோரி கொண்ட உணவில் தினமும் 275 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதனால் அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முறையான தூக்கம் அவசியம். இது உடலில் தேவையில்லாமல் சேரும் நீரின் அளவை குறைத்துவிடும்.

வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை தண்ணீரின் எடையைக் குறைக்க சிறந்த தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகும். மெக்னீசியம் ஒரு எலக்ட்ரோலைட் ஆகும், இது நம் உடலில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் பி6 சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது, நீர் அதிகரித்து உடலில் ஏற்படும் வீக்கங்களை தடுக்கிறது. அதேபோன்று மாதவிடாய் முன் நோய்க்குறியின் அறிகுறிகள் வராமல் பாதுகாக்கிறது.

click me!