தூங்கும் போது பலருக்கு தொண்டை வறட்சி ஏற்படும். அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்வேறு நோய்க்கான முக்கிய அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
சிலருக்கு தூங்கும் போது தொண்டை வறண்டு போகும். நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், அப்படியாவதுண்டு. ஆனால் தாகத்தால் தொண்டை வறண்டு போவது ஒருசில நேரங்களில் மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்றாகும். ஒருவருக்கு அடிக்கடி இப்படியானால், அதில் அலட்சியம் காட்டக்கூடாது. நடு இரவில் தொண்டை வறண்டு போகும் சூழ்நிலை ஏற்படும்போது, அது பல நோய்களின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் தொண்டை ஏன் வறண்டு இருக்கிறது? இதை எப்படி தவிர்ப்பது? உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
பொதுவாக அவ்வப்போது தொண்டை வறட்சி ஏற்படும் பலரிடம் நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சக்கரை நோய் உள்ளவர்கள் தூங்கும் போது மட்டுமில்லாமல், அவர்களுக்கு எப்போதெல்லாம் சக்தி இல்லாமல் போகிறதோ, அப்போது தொண்டை வறட்சி ஏற்படுகிறது. அதேசமயத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் தொண்டை வறட்சியும் ஏற்படும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தொண்டை வறட்சி நீங்கவில்லை என்றால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
சைனஸ்
சைனஸ் பிரச்சனையால் பலர் வாய் வழியாக சுவாசிக்கின்றனர். அது தூங்கும் போதும் தொடர்கிறது. அத்தகைய சூழலில் அவர்களுக்கு எளிதில் தொண்டை வறண்டு விடும். சைனஸால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் திறந்த வாய் வழியாக காற்றை சுவாசிப்பது, பலமுறை தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். இதனால் காலையில் எழுந்ததும் ஒருசிலருக்கு தொண்டை வலி கூட ஏற்படும்.
பாலிடிப்சியா
உடலில் நீர் சத்து குறையும் தன்மை பாலிடிப்சியா என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக உடலுக்கு தண்ணீர் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் தொண்டை வறண்டு விடும். தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. உடலில் நீர்ச்சத்து குறைவதால் இரவில் தொண்டை வறண்டு போகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் தொண்டை வறட்சி மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரீச்சைப்பழம் குறித்து யாருக்கும் தெரியாத 3 உண்மைகள்..!!
மசாலா பொருட்கள் நுகர்வு
அதிக உப்பு சாப்பிட்டால் நீரிழப்பு ஏற்படும். பூரி, பருப்பு மற்றும் எண்ணெய் மற்றும் மசாலா போன்ற உணவுகளை உட்கொள்வது அடிக்கடி தாகத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் தொண்டை வறட்சி ஏற்படுகிறது. மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கின்றன. இதனால் மசாலா பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதை அதிகளவில் குறைப்பது மிகவும் நல்லது.
இதை குறைப்பது எப்படி?
படுக்கைக்குச் செல்லும் போது தொண்டை வறட்சி பிரச்சனை இருந்தால், தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தூங்கும் போது மூக்கில் தான் சுவாசிக்க வேண்டும். வாயை திறந்து தூங்கக்கூடாது. அதேபோன்று படுக்கைக்கு அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து படுங்கள். இதன்காரணமாகவும் தண்ணீர் தாகம் ஏற்படும் போது, நாம் எளிதில் எடுத்து குடித்துவிடலாம்.