சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நிறைய கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் வைத்து நீரிழிவு நோயாளிகள் பலர் அக்கிழங்கை சாப்பிடுவது கிடையாது. வழக்கமான கிழங்கு வகைகளைக் காட்டிலும், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதனால் நீரிழிவு நோயாளிகள் எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன்பு உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டைக் கவனிக்க வேண்டியது அவசியம்
குளிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்கும் பலரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது இனிப்பாக இருக்கும் என்பதால், சக்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் பலரும் இதை சாப்பிட அஞ்சுகின்றனர். வானிலை மாறும்போது, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது அவசியம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நிறைய கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் வைத்து நீரிழிவு நோயாளிகள் பலர் அக்கிழங்கை சாப்பிடுவது கிடையாது. வழக்கமான கிழங்கு வகைகளைக் காட்டிலும், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதனால் நீரிழிவு நோயாளிகள் எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன்பு உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
உடலுறவின் போது மனச்சோர்வுக்கு ஏற்படுகிறதா? இதைப்படிங்க முதல்ல..!!
சாதாரண கிழங்கு வகைகளிலும் மற்றும் சக்கரைவள்ளிக்கிழங்கிலும் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. அதனால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு காரணம் சர்க்கரைவள்ளிக் கிழங்கிலுள்ள நார்ச்சத்து தான். அதனால் இதை சாப்பிடும் போது, உடலில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குறைந்துவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை மதிய உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அதே சமயத்தில் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும் நாட்களில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடச் சொல்லி ஊட்டசத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதன்படி வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வருவது நல்ல பலனை தருகிறது. அதிக எடை கொண்ட அல்லது இதய நோய் உள்ள நீரிழிவு நோயாளிகள் சக்கரைவள்ளிக் கிழங்கை கட்டுப்பாட்டுடன் சாப்பிட வேண்டும். இதிலிருக்கு வைட்டமின் பி6 மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் உடலுக்கு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு இது நன்மை செய்கிறது. இதிலிருக்கும் பீட்டா கரோட்டின், சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கவும் வழிவகை செய்வது குறிப்பிடத்தக்கது.