Nerves: நரம்புகள் வலுப்பெற உதவும் சைவ உணவுகள் இவை தான்!

By Dinesh TG  |  First Published Dec 13, 2022, 9:19 PM IST

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் நரம்புகளும் ஒன்று. முறையான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடவில்லை எனில், உடலில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் வரக் கூடும்.


நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய காரணமாக விளங்குபவை பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். தினந்தோறும் பழங்களை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோய்கள் வந்த பின்னர், மருத்துவமனைகளை நாடிச் செல்வதைக் காட்டிலும், வருமுன் காப்பதே சிறந்தது. நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் நரம்புகளும் ஒன்று. முறையான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடவில்லை எனில், உடலில் உள்ள நரம்புகளில் பாதிப்புகள் வரக் கூடும்.

வைட்டமின் பி12

Tap to resize

Latest Videos

உடலில் உள்ள நரம்புகள் வலுப்பெறவும், நரம்பியல் நோய்கள் அனைத்தும் குணமடையவும் சில உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைத் தரும். வைட்டமின் பி12 சத்து உடல் நரம்புகள் வலுப்பெறுவதற்கு மிக முக்கியம். கோழியின் ஈரல் போன்ற அசைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் பி12 சத்து அதிகமாக உள்ளது. ஆனால், அதுவே சைவ உணவுகளை சாப்பிடும் நபர்கள் என்றால், பால் பொருட்களை அதிகமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

நரம்புகள் வலுப்பெற சாப்பிட வேண்டியவை

40 வயதைக் கடந்த அனைவரும், தினந்தோறும் ஒரு முறையாவது ஏதேனும் ஒருசில பழங்களை அவசியமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இதனை தொடரந்துப் பின்பற்றினால் நரம்பு மண்டலம் வலுப்பெறுவது உறுதி.

உலர் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் மிகவும் முக்கியமானது, நரம்பு மண்டத்தை வலுவாக்குவது. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இருக்கும் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாமல், எல்லாருமே பாதாம், முந்திரி மற்றும் வாதுமைப் பருப்புகள் ஆகியவற்றை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், நமது நரம்பு மண்டலம் மிக வலுவாக இருக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரையை பகல் உணவில் சேர்த்துக் கொள்வது நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

தேநீரில் லவங்கப்பட்டை சேர்த்துக் குடிப்பது, நரம்புகளுக்கு நன்மையை அளிக்கும்.

நரம்புகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான உணவுகளிலும் மஞ்சள் தூள் மற்றும் வெந்தயத்தை தவறாமல் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாமரைத் தண்டு அல்லது தாமரை விதையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தாலும், இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் அனைத்தும் குணமாகி விடும். 

click me!