மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு: வெந்நீர் குளியலில் ஒளிந்திருக்கும் ஆபத்து..!!

By Dinesh TGFirst Published Dec 14, 2022, 6:03 PM IST
Highlights

பலர் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பார்கள். ஆனால் குளிர்காலத்தில் மிகவும் சூடான நீரில் குளித்தால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது முதல் ஆண்மைக் குறைவு வரை பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 

குளிர்காலத்தில் மழை குளியல் நல்லதல்ல. ஆனால் அதே சமயத்தில் குளிரை காரணம் காட்டி குளிக்காமல் இருப்பதும் உடலுக்கு நல்லது கிடையாது. அதனால் எந்த காலம் என்றாலும் தினசரி குளிப்பது உடல்நலத்துக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். பொதுவாக குளிர்காலம் என்றவுடன் நம்மில் பலரும் வெந்நீரில் தான் குளிக்கிறோம். குளிர்ந்த காலநிலையில் வெந்நீர் உடலில் விழும் போது, அது நன்றாக இருக்கும். அதனால்தான் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு சுகமாக இருக்கும். ஆனால் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. குறிப்பாக குளிர்காலங்களில், அது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

விந்தணு குறைந்துவிடும்

தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களுக்கு 4 முதல் 5 வாரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. 

உடலில் அரிப்பு

மிகவும் சூடான நீரில் குளிப்பதால் சருமத்தில் சிவப்பு நிறத்தில் அரிப்பு தோன்றும். அதுமட்டுமின்றி, அதிக வெந்நீரில் குளிப்பதால் சருமத்தில் ஈரப்பதம் வெளியேறி, சருமம் வறண்டு, கரடுமுரடாகிவிடும். இதனால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்துக்கு ஆளாக நேரிடும். 

கண் தொற்று

அதிக வெந்நீரில் குளித்தால் கண்கள் பாதிக்கப்படும். இது கண் காயங்களிலிருந்து வெப்ப நெக்ரோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பிரச்சனை அதிகமாக இருந்தால், குருட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முடி உதிர்வு

முடி கொட்டுதலால் பலரும் அவதிப்படுவது சகஜமாகிவிட்டது. காற்று மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகு போன்ற பல காரணங்களால் முடி சேதமடைகிறது. உங்கள் தலைமுடியை வெந்நீரில் கழுவுவது உங்கள் உச்சந்தலையில் எரியும். பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதனால் முடிவு உதிர்வு ஏற்படும்.

உடலுறவின் போது மனச்சோர்வுக்கு ஏற்படுகிறதா? இதைப்படிங்க முதல்ல..!!

அதிக ரத்த அழுத்தம்

மிகவும் வெந்நீரில் குளிப்பவர்களுக்கு விரைவாகவே ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் ஏற்கனவே ரத்த அழுத்தம் பாதிப்புகளை கொண்டவர்களும், சுடு தண்ணீரில் குளிப்பதை தவிருப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, வெந்நீரில் குளிப்பதால் கார்டியோ மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே நமது உடல் வெப்பநிலையை விட 5 டிகிரி வெப்பமான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 40 முதல் 42 டிகிரி வரை வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் இந்த நீரை 60-70 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கினால் அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  குளிர்காலங்களில் வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் நீண்ட நேரமும், அதேசமயத்தில் மிகவும் சூடான நீரில் குளிக்கக்கூடாது.

click me!