
இப்பொழுது நமக்கு கோடைக் காலம் ஆரம்பித்துள்ளது. வெயில் காலத்தில் நல்ல பசி ஏற்படும். ஜீரண உறுப்புக்கள் வேகமக செயல்படுவதால் அடிக்கடி பசிக்கும். இதனால் அளவு தெரியாமல் சாப்பிட்டு, இதனால் சில கிலோ எடைகள் அதிகரிக்கக் கூடும்.
இதற்காக வருத்தப்பட வேண்டாம்! உடலின் எடையைக் குறைக்கவும், உடலை மெலிந்த அமைப்பாக வைக்கவும் இங்கே சில உணவுப்பழக்கங்கள் தரப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றினால் நன்றாக சாப்பிடலாம். உடலும் எடை கூடாமல் அழகாக பராமரிக்கலாம்...
சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்:
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாலட், நிறைய பழச் சாறுகள்.
சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்:
எண்ணெய்,வெண்ணெய்,நெய்,பன்னீர்,சீஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக க்ரீன் டீ,புதினா டீ (அ) எலுமிச்சை டீ
போனஸ் டிப்ஸ்
சூப்பர் டீ தயாரிப்பது எப்படி?
தேவையானவை :
தேயிலை தூள் எலுமிச்சை தோல் துளசி இலை ஏலக்காய் கிராம்பு பட்டை பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை
தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் இந்த டீயை ஊற்றி பனை வெல்லம் (அ) தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதுவே ஆரோக்கியமான,சுவையான,நறுமணமான க்ரீன் டீ வீட்டில் செய்யும் முறை. இவ்வாறு க்ரீன் டீ தினமும் அருந்துவதால் ஒரே மாதத்தில் இளமையாகவும், உடல் எடை குறைந்தும் காணப்படுவீர்கள்.