
நாம் தினமும் தூங்கும் நிலைக்கும், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்புண்டு. ஆம். தூங்கும் போது, நேராக படுப்பது, வலது பக்கமாக படுப்பது ஆபத்து. எனவே இடது பக்கமாக உறங்குவதுதான் சிறந்த நிலை.
ஏனெனில் இடது பக்கமாக தூங்கும் போது பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறதாம்.
இடது பக்கமாக தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ...
** இடது பக்கமாக தூங்கினால், நமது உடம்பில் உள்ள டாக்ஸின்கள் நிணநீர் வடிகால் மூலம் வெளியேற்றப்படும். இதனால் அதன் மூலம் ஏற்படும் கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம்.
** நமது உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகமாக தேங்குகிறது. எனவே, நாம் இடது பக்கமாக தூங்குவதால், கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படுகிறது.
** இடது பக்கமாக தூங்குவதால், உணவு செரிமானம் சீராக நடைபெறும். மேலும் இதனால் உணவுகள் இரைப்பையின் வழியாக கணையத்தின் ஈர்ப்பின் காரணமாக எளிதில் செரிமானம் அடைகிறது.
** இடது பக்கம் தூங்குவதால், அசிடிட்டியை ஏற்படுத்தும் அமிலம் இரைப்பையில் உள்ள உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுத்து, நெஞ்செரிச்சல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
** இடது பக்கமாக தூங்குவதால், கல்லீரம், மண்ணீரல் ஆரோக்கியம் மற்றும் பித்த நீரின் உற்பத்தியை அதிகரிப்பதால், உடலில் கெட்டக் கொழுப்புக்களை தேங்க விடாமல் தடுக்கிறது.