
சிறுநீர் நிறம் மாறி சிவப்பாகவோ அல்லது இரத்தம் கலந்து வந்தால் நம் உடல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்...
ஹிமடூரியா
உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் இரத்தபோக்கு இருந்தால் இந்த பிரச்சனையானது ஏற்படும். இதனால் சிறுநீரில் இரத்தம் வெளியேறும். இதனை அலட்சியப்படுத்தக்கூடாது.
புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் அறிகுறியாக இரத்தக்கட்டிகளாக சிறுநீரில் வெளிப்படும்.
சிறுநீரக கற்கள்
சரியாக நீர் அருந்தாமல், சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிறுநீரக கட்டிகள் ஏற்படும். இதனால் இரத்தமாக வெளிப்படும். சிறுநீரக கட்டி பிரச்சனை இருப்பவர்கள் காபி,டீ போன்றவற்றை அருந்துவதை நிறுத்த வேண்டும் இல்லையெனில் பாதிப்பு இன்னும் தீவிரமாகும்.
சிறுநீரக நோய்கள்
சிறுநீரக குழாயில் ஏற்படும் கோளாறுகள், ப்ரோஸ்டேட் வீக்கம், ப்ரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள், பயாப்ஸி போன்றவற்றினாலும் சிறுநீரில் இரத்தம் வெளிப்படும்.
இரத்தநோய்கள்
இரத்தம் சம்பந்தப்பட்ட சில நோய்களான சிக்கில் செல் அனீமியா, இரத்தத்தட்டு நோய்கள் ஆகியவற்றாலும் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்.
பரிசோதனை அவசியம்
சிறுநீரில் இரத்தம் வருவதுடன் எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று அறிந்து கொள்ளதான் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே சிறுநீர் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்கள் வலியுறுத்துவர்.