உங்களின் சுகர் உயர்வை கட்டுப்படுத்த காலையில் இந்த ஜூஸ் குடிங்க!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 10:55 PM IST
Highlights

வெயில் காலங்களில் உடல் சூட்டைத் தணிக்கும் பழங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை பழம். எலுமிச்சையில் தயாரிக்கப்படும் சாறு, குறைந்த கலோரிகளை அளித்து, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும், செயற்கை பானங்களுக்கு சிறந்த மாற்றாகவும் திகழ்கிறது. நீரிழிவு நோயாளிகள், எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கும் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள நீர், இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்காது. இருப்பினும், சற்று குறைக்க காரணமாக இருக்கலாம், ஆனால், இது நிச்சயமாக சரியான தருணத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க உதவும். எளிதில் தயாரிக்கக் கூடிய எலுமிச்சை சாற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாக இருக்கும். மேலும் உங்களை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அனைவரும் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், சாதாரண இரத்த குளுக்கோஸ் உங்கள் உடலில் உள்ள திரவங்களை குறைக்கிறது.

சர்க்கரை நோயாளிகளே: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் உணவுகள் இவை தான்!

எலுமிச்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ளது. இவை எளிதில் உடையாது மற்றும் இரத்த ஓட்டத்தில் சர்க்கரைகள் மெதுவாக வெளியேறுவதனை உறுதி செய்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதன் மூலம் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

முகப்பொலிவிற்கு இந்த ஒரு விதை போதும்: ஆச்சரியம் அளிக்கும் பயன்கள்!

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அமெரிக்க நீரிழிவு சங்கம் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் ஆகிய சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை “நீரிழிவு சூப்பர்ஃபுட்” என்று அழைக்கிறது. எலுமிச்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான நீரிழிவு நோயாளிகளின் உணவு முறைக்கு உதவும். ‘அட்வான்ஸ் இன் நியூட்ரிஷன்’ இதழில் வெளியான ஆய்வு முடிவில், எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் காணப்படும் நரிங்கினென் என்ற இரசாயன கலவை, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.

எலுமிச்சை சாற்றை பிழிந்து, தண்ணீருடன் சேர்த்து குடிப்பது, உங்களின்தினசரி பரிந்துரைக்கப்பட்ட நார்ச்சத்து அல்லது வைட்டமின் சி-க்கு சமமாக இருக்காது. ஆனால், வெற்று கலோரிகள் மற்றும் சர்க்கரையால் நிரப்பப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் சோடாக்களை விடவும் இது மிகவும் சிறந்தது. வீட்டில் தயாரிக்கும் போது எலுமிச்சை நீரில், சர்க்கரை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதிலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

click me!