Lizard in food: பல்லி விழுந்தால் உணவு விஷமாக மாறுமா? இதோ யாரும் அறிந்திராத தகவல்!

By Dinesh TG  |  First Published Nov 1, 2022, 2:23 PM IST

நிஜத்தில் பல்லி விழுந்த உணவு விஷம் தானா? இல்லையா? அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.


நாம் உண்ணும் உணவுகளில் சிறு பூச்சிகள் விழுந்தாலே, உணவு வீணாகி விட்டதே என்று கவலைப்படுகிறோம். இருப்பினும், சிலர் சிறு பூச்சி தானே என்று, பூச்சியை எடுத்துப் போட்டுவிட்டு உணவை மீண்டும் சாப்பிடவும் செய்வார்கள். ஆனால், உணவில் பல்லி நிச்சயம் யாராக இருந்தாலும் அச்சப்படுவது நிச்சயம். பொதுவாகவே, பல்லி விழுந்த உணவு விஷம் என பலரும் கூறுக் கேட்டிருக்கிறோம். சில திரைப்படங்களில் கூட, இது மனித உயிரைப் பறிக்கும் விஷமாகவே காட்டப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் பல்லி விழுந்த உணவு விஷம் தானா? இல்லையா? அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பல்லி விழுந்த உணவு:

Tap to resize

Latest Videos

பூச்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை,  விஷத்தன்மை கொண்டவை மற்றும் விஷத்தன்மை அற்றவை என குறிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக எந்த ஒரு பூச்சியாக இருந்தாலும், அது உணவில் விழுந்து விட்டால் ஒரு விதமான நச்சுப்பொருளை வெளியேற்றி விடுமாம். இதன் காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை, விஷத்தன்மை உடைய பூச்சி உணவில் விழுந்து விட்டால், அந்த உணவினை நீங்கள் சாப்பிட்டு விட்டால் தீவிர உடல் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

விஷம் இல்லை

நம்மில் சிலர் பல்லியை விரும்புவார்கள். ஆனால், பலரும் பல்லியைப் பார்த்தால் அருவருப்பு மற்றும் பயம் கொள்வார்கள். உங்கள் வீடுகளில் இருக்கும் பல்லிகள் விஷத்தன்மை உடையதாக இல்லை விஷத்தன்மை அற்றதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல்லிகள் உணவில் விழும் சமயத்தில், அவை சிறுநீர் அல்லது மலம் கழிக்க வாய்ப்புள்ளது. இ இந்த சிறுநீர் மற்றும் மலம் நச்சுத்தன்மை அற்றதாக இருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும், பல நேரங்களில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுமாம். ஆனால், இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், பல்லிகள் உணவில் விழுவதால், அந்த உணவு விஷமாக மாறுவதில்லை.

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் "பன்னீர் பீஸ் மசாலா" - இப்படி செய்து பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது!

உணவைக் கெட்டுப் போகச் செய்யும் கிருமிகள்

இருப்பினும், பல்லி அதிகமாக கழிவறை போன்ற சுத்தமற்ற இடங்களில் இருந்து வருவதனால், அதனுடைய கால்களில் நம் கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் இருக்கின்றது. பல்லி உணவில் விழும்போது இந்த கிருமிகள், உணவில் கலந்து விடுவதால், உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதை அறியாமல் நாம் உணவை சாப்பிட்டு விடுவதால், இதுபோன்ற வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகிறது.

click me!